Pages

மின்சாரமும் காந்தமும்


மின்சாரத்தை பயன்படுத்தி காந்தம் உண்டாக்கலாம். காந்தத்தை பயன்படுத்தி மின்சாரத்தை உண்டாக்கலாம். ஒரு இரும்பு துண்டு அல்லது இரும்பு ஆணி போன்ற பொருளை எடுத்துக் கொண்டு அதில் சில நூறு சுற்றுகள் காயில் கம்பிகளை சுற்றி பிறகு காயில் கம்பியின் இரண்டு முனைகளிலும் மின்சாரத்தை செலுத்தினால் இரும்பு துண்டு காந்தமாக மாறிவிடும். காயில் கம்பியில் எனாமல் பெயிண்ட் பூசப்பட்ட செம்பு கம்பியாகும். மின்மோட்டார்களின் காயில்களுக்கு மின்சாரம் கொடுப்பதால் மின்மோட்டாரில் காந்தம் உண்டாகிறது. ஆகவே மோட்டாரானது சுற்றுகிறது.
மின்சாரமணி போன்றவற்றின் காயில்களுக்கு மின்சாரம் செல்லும் போது மின்சாரமணியில் காந்தம் உண்டாகி மணி அடிக்கிறது. ஆகவே மின்சாரத்தின் மூலம் காந்தம் உண்டாகிறது என்பதை அறியவும்.

காந்தம் மூலம் மின்சாரம்:
சாதாரண சைகிள் டைனமோக்களில் பார்க்கவும். அதன் உள்ளே ஒரு காந்த உருளை இருக்கும். காந்த உருளையை சுற்றிலும் காயில்கள் இருக்கும். சைக்கிள் சக்கரத்தின் மூலமாக இந்த காந்த உருளை சுற்றுகிறது. ஆகவே இதன் காயிலில் மின்சாரம் உண்டாகிறது. ஆகவே காந்தம் மூலம் மின்சாரம் உற்பத்தி ஆகிறது என்பதை அறியவும்.