மோட்டாருக்கு மின்சப்ளை கொடுத்தும் மோட்டாரானது ஓடதுவங்கவில்லை அதை எப்படி நிவர்த்தி செய்வது.
ஒவ்வொரு ஃபேசிலும் மின்சப்ளை உள்ளதா எனவும், மின்னழுத்தம் போதுமான அளவு உள்ளதா எனவும் அளந்து தெரிந்து கொள்ள வேண்டும்.
சுமையை குறைத்திட வேண்டும் அல்லது சுமையின்றி மோட்டாரை துவக்கி சரிபார்த்திட வேண்டும்.
கட்டுப்படுத்தும் கியரில் உள்ள முனைகள் சரியாக உள்ளனவா எனப் பார்க்க வேண்டும்.
மோட்டரின் உள்பகுதியில் உள்ள சிலிப் ரிங்ஸ் எனப்படும் வளையம் போன்ற அமைப்பு அதே மோட்டரின் உள்பகுதியில் உள்ள பிரஷ் என்ற அமைப்புடன் நல்லபடியாக தொட்டு தொடர்ச்சியாக உள்ளதா எனவும் பார்க்க வேண்டும்.
மோட்டாரின் ரோட்டாரில் உள்ள சிலிப் ரிங்ஸ் எனப்படும் வளையம் போன்ற அமைப்பு உடைந்துள்ளனவா எனப் பார்க்க வேண்டும்.
மோட்டரின் காயில் இணைப்புகளை சரிபார்க்க வேண்டும் . எதிர் இணைப்புகள் உள்ளதா எனவும் பார்க்க வேண்டும். (அதாவது ரிவர்ஸ் கனெக்சன்)
பேரிங்குகள் சரியாக உள்ளதா எனப்பார்க்க வெண்டும். சரியான அளவில் லூப்ரிகேசன் செய்ய வேண்டும். காற்று இடைவெளிகளை சுத்தப் படுத்தி எதுவும் அடைத்துக் கொண்டிருக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.