Pages

About Me




அனைத்திலும் சமத்துவத்தை மட்டும் விரும்பும் சராசரி இளைஞன்:

                                                 பெயர்                :    ம.பாண்டியராஜன் 
                                                 தந்தை                :    வே.மதியழகன்
                                                 பிறந்த ஊர்        :    நெய்வத்தளி கிராமம்
                                                 வளர்ந்த இடம்  :    மறமடக்கி கிராமம் (அம்மா பிறந்த இடம்)
                                                 கல்வித் தகுதி     :    பொறியியல் பட்டம்
                                                 மொழி                :    தமிழ், ஆங்கிலம் எழுதி படிக்கும் அளவிற்கு.

தொடர்பு கொள்ள:

                                                 Gmail               :   mathimozhi.info@gmail.com
                                                 Ymail                 :    m.rajan7@ymail.com
                                                 Face Book      :   pandiya.rajan.923@facebook.com
                                                 Website           :   http://electricaltamil.blogspot.in

வணக்கம்,
                   நான் பொறியியல் படிக்கும் போது மின்னியல் தொடர்பாக தெரிந்து கொள்ள இணையத்தை பயன்படுத்துவது வழக்கம். அப்பொழுது மின்னியல் தொடர்பாக கட்டுரைகளை யாரும் தமிழில் எழுதவில்லை என்பதை தெரிந்து கொண்டேன். 

எதிர்கால சந்ததியினர் மின்னியல் தொடர்பாக இணையத்தை பயன்படுத்தும் போது இந்த தளம் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கத்துடன் மின்னியல் பற்றி எனக்குத் தெரிந்தவற்றை தமிழில் எழுதத் தொடங்கினேன்.

நான் எழுதிவரும் அனைத்தும் நான் படித்து தெரிந்து கொண்ட மற்றும் என்னுடைய அனுபவத்தில் தெரிந்து கொண்டவையாகும். இதை நான் சுமையாக நினைக்காமல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எனக்கு நேரம் கிடைக்கும் போது எழுதி வருகிறேன்.

தொழில்நுட்பம் தான் இந்த உலகத்தை ஆளப்போகிறது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன் நான். எனவே அதை அவர்களுடைய சொந்த மொழியில் கற்றுத் தேர்வதே மிகச் சிறந்தது ஆகும்.

உலகத்திலேயே மிகப் பெரிய ஆயுதமாக நான் நினைப்பது இரண்டே இரண்டு அன்பு, பொறுமை இவை ஒருவருக்கு அமையப்பெற்றால் அவர் அனைவராலும் மதிக்கப்படுவர். 

வாழ்க மனிதநேயம் !            வளர்க பகுத்தறிவு !