அனல் மின் ஆக்கம்:
நீர் இல்லாத இடங்களில் நிலக்கரி, மண்ணெண்ணெய், எரிவாயு போன்ற பொருள்களை உபயோகித்து நீரை சூடாக்கி, நீராவி உண்டுபண்ணி, அதை நீராவி விசையாழியில் (steam turbine) செலுத்தி சுழலச் செய்து, இதனுடன் இனைக்கப்பட்டிருக்கும் மின்னாக்கியில் இருந்து மின்சாரத்தைப் பெறுகிறோம். இது போன்ற அனல் மின் நிலையங்கல் தமிழ் நாட்டில் தூத்துக்குடி, பேசின் ப்ரிட்ஜ், எண்ணூர், நெய்வேலி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
