மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !
Showing posts with label single phase prevention. Show all posts
Showing posts with label single phase prevention. Show all posts

ஆட்டொமேட்டிக் சிங்கிள் பேஸ் பிரிவெண்டர் (Single Phase Prevention)

தானியங்கி வசதி(Automatic Starter):
மின்சாரம் நாள் முழுவதும் தொடர்ந்து கிடைக்காமல், விட்டு விட்டு வரும் ஒவ்வொரு சமயமும் மோட்டாரை இயக்கிவிடுவதற்காக அடிக்கடி சைட்டிற்கு அல்லது தோட்டத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது. இந்த ஆட்டோமேட்டிக் சிங்கிள் பேஸ் பிரிவெண்டரை ஸ்டார்ட்டருடன் இனைத்து பின்பு மோட்டாருடன் இனைத்தோமானாள் மின்சப்ளை நின்று மீண்டும் வரும் சமயங்களில் சிங்கிள் பேஸ் பிரிவெண்டர் ஸ்டார்ட்டரை ஆட்டொமேட்டிக்காக ஆன் செய்கிறது. ஒரு ஆள் செய்யவேண்டிய வேளையை இந்த ஆட்டொமேட்டிக் சிங்கிள் பேஸ் பிரிவெண்டர் ஸ்டார்ட்டரின் உதவியுடன் எளிமையாக்குகிறது.

ஆட்டோ மேடிக் சிங்கிள் பேஸ் பிரிவெண்டரில் கால தாமதம் ஏன்?(Delay time):
மின்சாரம் நின்று மீண்டும் வரும்போது, கண் இமைக்கும் நேரத்திற்குள் மின்னல் வேகத்தில் தோன்றும் அதிக வோல்டேஜ் (Surge Voltage) மோட்டார் காயிலுக்குள் புகுந்து மிகவும் பலவீனமான வொயர் பகுதியை தெறிக்கச் (Burst) செய்துவிடும். ஆகையால் மோட்டாரை ஆட்டோ மேட்டிக்காக உடனே ஸ்டார்ட்செய்துவிடாமல் சற்று காலதாமதத்திற்குப் பிறகு ஸ்டார்ட் செய்து அதிக வோல்டேஜில் (Surge Voltage) சிக்கிவிடாமல் பாதுகாக்கிறது.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.