மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

வீட்டு ஒயரிங் தொடர் -2 (House wiring - 2)

எனர்ஜி மீட்டர்:
நாம் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்தின் அளவை இது காட்டும். அதாவது வீடுகளில் பயன்படுத்தும் மின் சாதனங்களின் மொத்த மின்சார அளவையும் இதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இது அளவுகளை kwh என்ற முறையில் காட்டும். 1000 wh என்பது 1 kwh எனப்படும் இந்த 1kwh என்பது 1 unit ஆகும். 1 மணி நேரத்தில் 1000 wh மின்சாரம் பயன்படுத்தி இருந்தோமேயானால் அது 1 unit எனப்படும்.


மின்சார வாரியத்தில் இருந்து வருபவர்கள் இந்த மீட்டரில் காட்டும் யூனிடை வைத்துதான் எவ்வளவு பணம் நாம் செழுத்த வேண்டும் என்று அட்டையில் எழுதிவிட்டுச் செல்வாகள்.

மெயின் சுவிட்ச்:

இந்த சுவிட்சை தலைவர் என்று சொல்லளாம் தொண்டர்கள் செய்யும் தவறுகளை சரிசெய்யும் பொறுப்பு மற்றும் அவர்களை நீக்கும் அதிகாரம் அனைத்தும் தலைவருக்கு  உரியது.

மெயின் சுவிட்ச் அமைப்பும் அப்படித்தான் வீட்டிற்கு செல்லக்கூடிய மின்சாரம் மெயின் சுவிட்சை தாண்டித்தான் செல்ல வேண்டும்.

அப்படி தாண்டி சென்ற பிறகு மின் சாதனத்தில் ஏதாவது பழுது ஏற்பட்டால் நாம் இந்த மெயின் சுவிட்சை ஆப் செய்து விடலாம். அப்படி ஆப் செய்து விட்டால் வீட்டிற்கு செல்லும் மொத்த மின்சாரமும் நின்றுவிடும். 

பழுது ஏற்பட்ட மின் சாதனத்தையோ, ஒயரையோ சரிசெய்து விட்டு மீண்டும் மெயின் சுவிட்சை ஆன் செய்து கொள்ளலாம்.


2வே, 3வே என்று பல வகைகளில் change over switch கிடைக்கிறது. இதன் ஆம்பியர் அளவு 15A, 30A, 60A, என பல ஆம்பியர் அளவுகளில் கிடைக்கின்றன.

என்னுடைய வீட்டில் நான் பயன்படுத்துவது 2வே change over switch ஆகும். இதில் 1வே(வழி) மின்சார வாரியத்தில் இருந்தும் வரும் மின்சாரத்தையும் மற்றொரு வே அந்த மின்சாரம் இல்லாத போது ஜெனரேட்டரில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தும் வகையிலும் இருக்கும்.

இதன் ஆம்பியர் மற்றும் மின்னழுத்த அளவு 32A ~ 415V ஆகும். தயாரித்த நிறுவனத்தின் பெயர் Roopa change over switch ஆகும்.

பியூஸ் கேரியர்:

இது நமது பயன்பாட்டிற்கு ஏற்ப 15A, 30A, 60A, என பல ஆம்பியர் அளவுகளில் கிடைக்கின்றன.

இதன் முக்கிய வேலை என்னவென்றால் நமது வீட்டிற்கு ஒரு நிலையான மின்சாரம் வந்து கொண்டிருக்கிறது (230V). மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக சற்று அதிக அளவில் மின்சாரம் வரும் போது (240V - 250V). இந்த பியூஸ் ஆனது எரிந்து விடுகிறது. வீட்டிற்குல் இருக்கும் மின் சாதனங்கள் பாதுகாக்கப்படுகிறது.


மிகவும் பாவம் இந்த பியூஸ் தன்னை வருத்திக் கொன்டு மற்றவர்களை காப்பாற்றுகிறது.

மீண்டும் நாம் எரிந்துபோன பியூஸ் கம்பியை எடுத்துவிட்டு மெல்லிய காப்பர் கம்பியை இனைத்து சரிசெய்து விடலாம். எனவே மீண்டும் சிங்கம் கலத்திற்கு வந்துவிடும்.
தொடரும்....

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.