மின்சாரம்
பல நேரங்களில் உலோக பெட்டிக்குள்
செல்ல வேண்டிய கட்டாயம்
ஏற்படுகிறது. மெயின்
switch, மீட்டர்,
இரும்பு
குழாய்கள், அயர்ன்பாஸ்,
கிரைண்டர்,
மின்மோட்டார்கள்,
மின்விசிரி
போன்ற பொருள்களின் வெளிப்புறம்
(body) உலோகம்
ஆகும்.
இந்த
மின்சாதனங்களின் உள் பகுதியில்
மின்சாரம் செல்லும் போது
எதிர்பாராத விதமாக இதன்
பாடியில் மின்சாரம் பாய்ந்துவிடும்
வாய்ப்பு உள்ளது. அப்போது
நாம் அந்த மின்சாதனங்களை
தொட்டால் ஷாக் அடிக்கும்.
இது
போன்ற ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக
இதன் பாடியில் எர்த் இணைப்பு
கொடுப்பார்கள். பூமியில்
சுமார் ஒரு சதுரடி அகலத்தில்
பள்ளம் வெட்டி அதில் இரும்பு
பைப்பை அடித்துவிட்டு அதன்
மேல்புறம் எர்த் கம்பியை
இணைப்பார்கள்.
மின்சாரம்
மின்சாதனங்களின் பாடியில்
பாயும் வாய்ப்பு ஏற்பட்டால்
அந்த மின்சாரம் வேகமாக இந்த
எர்தின் வழியாக பூமிக்கு
சென்று விடும்.
இந்த
எர்த் பகுதியில் பூமிக்கு
உள்ளாக இனைக்கப்பட்டுள்ள
கம்பியை நன்றாக இறுக வைக்க
உப்பு, கரி,
தண்ணீர்,
நன்றாக ஊற்ற
வேண்டும்.
இந்த
எர்த் ஆனது மனிதனை விட
மிசின்களுக்கு தான் மிகவும்
பாதுகாப்பனதாக இருக்கும்.
ஆகவே கண்டிப்பாக
இந்த எர்த் இணைப்பை அணைவரின்
வீடுகளிலும் கொடுக்க வேண்டும்.
குறிப்பு:
ஒரு
கம்பியில் உள்ள எர்த் இணைப்பு
நன்றாக உள்ளதா என்பதை தெரிந்து
கொள்ள வேண்டுமானால் ஒரு
பல்பின் பேஸ் (+Ve), நியூட்ரல்
(-Ve) வோயருக்கு
எப்படி மின் இணைப்பு கொடுத்தால்
பல்பானது எரிகிறதோ அதேபோல்
பேஸ்க்கும் (+Ve), எர்துக்கும்
(Gnd) மின்
இணைப்பு கொடுத்தால் பல்பானது
எரிய வேண்டும் அப்படி
எரிந்தால் எர்த் இணைப்பானது
மிகவும் நன்றாக உள்ளது என்று
அர்த்தம்.