கண்டக்டரில்(conductor)
நான்கு
எலக்ட்ரான்களுக்கு குறைவாக
உள்ள பொருள் அதாவது (conductor
property யில்
நாம் மின்னோட்டத்தை ஏற்படுத்த) அதாவது எலக்ட்ரான்களை
நகர்த்த தேவைப்படும்
மின்னழுத்ததையே(electrical
pressure) voltage என்கிறோம்.
உதாரணமாக
நாம் ஒரு பெரிய பொருளை நகர்த்த
வேண்டும் என்றால் அந்த
பொருளின் கீழ்ப்பகுதியிலோ
மேல்ப்பகுதியிலோ அல்லது
நடுப்பகுதியிலோ நம் கையை
வைத்து விசையுடன் சேர்ந்தார்
போல் ஒரு அழுத்தத்தை
கொடுப்போம்(man made mechanical
pressure). நாம்
அந்த பொருளிற்கு கொடுக்கும்
அழுத்தம் அதிகமாக இருந்தால்
அந்த பொருள் வேகமாக நகரும்
.
ஆக
நாம் கொடுத்த அழுத்தம் உயர்
அழுத்தம் எனப்படும்.
அதுவே நாம்
அந்த பொருளிற்கு குறைவான
அழுத்தம் கொடுத்தால் அந்தப்
பொருள் மெதுவாக நகரும்.
ஆக நாம்
கொடுத்த அந்த அழுத்தம் குறை
அழுத்தம் எனப்படும்.
நம்மால்
கொடுக்கப்பட்ட இந்த அழுத்தத்தை
நாம் கண்களால் பார்க்க
முடுயாது.
எப்படி
நாம் ஒரு மின் கடத்தா பொருளிற்கு
அழுத்தம் கொடுத்து அந்த
பொருளை நகர்த்துகிறோமோ.
அதே போல்தான்
மின்சார உற்பத்தி நிலையங்களில்
(power plant) மின்னழுத்தத்தை
கொடுத்து கடத்திகள் வழியாக
மின்னோட்டத்தை செலுத்தலாம்.
உயர்
மின்னழுத்தம் கொடுக்கும்
பொழுது கடத்திகள் வழியாக
அதிக மின்னோட்டம் செல்லும்.
குறைந்த
மின்னழுத்தம் கொடுக்கும்
பொழுது கடத்திகள் வழியாக
குறைந்த மின்னோட்டம் செல்லும்.
ஆக
எப்படி மின்னழுத்தத்தை கூட்டி
மற்றும் குறைத்து கொடுக்கும்
பொழுது கடத்திகள் வழியாக
மின்னோட்டம் கூட குறைய
செல்கிறதோ, அதே
போலதான் மின்னோட்டம் செல்லக்கூடிய
அந்த கடத்தியின் (conductor)
குறுக்கு
வெட்டு பரப்பானது (அளவானது)
அதிகமாக
இருந்தால் மின்னோட்டம் அதிகமாக
இருக்கும்.
கடத்தியின்
அளவு(conductor -ன்
குறுக்குவெட்டு பரப்பு)
குறைவாக
இருந்தால் மின்னோட்டம் குறைவாக
இருக்கும் .
இவர்தான் மின்னழுத்தத்தை(Voltage) கண்டுபிடித்தவர்.