சாதரண
மின் சுற்றுகளில் ஓம் விதியைப்
பயன்பத்தி மின்தடை(resistance),மின்னோட்டம்(current),மின்னழுத்தம்(voltage)
ஆகியவற்றைக்
கணக்கிட முடியும்.
ஆனால்
சற்று சிக்கலான பல கிளைகளைக்
கொண்ட மின்சுற்றில் அவ்வாறு
கணக்கிட முடியாது.
எனவே
அவற்றை எளிய முறையில் கணக்கிட
கிர்ச்சாப் என்பவர் இரு
விதிகளைக் கண்டுபிடித்தார்.
அவை
current law or point law
voltage
law or mesh law
current law:
எந்த
ஒரு மின் சுற்றிலும் இரண்டிற்கு
மேற்பட்ட கிளை பாதைகள் சந்திக்கும் ஒரு புள்ளியில் சந்திக்கின்ற
மின்னோட்டங்களின் குறியியற்
கூட்டுத்தொகை பூஜ்யம்
ஆகும்.
அதாவது
:
ஒரு
சந்திப்பு புள்ளியில் வந்து
சேரும் மின்னோட்டங்களின்
கூட்டுத்தொகை,
அந்த
சந்திப்பு புள்ளியில் இருந்து
வெளிச் செல்லும் மின்னோட்டங்களின்
கூட்டுத்தொகைக்கு சமம்.
நான்கு
மின்னோட்டங்கள் ஒரு புள்ளியில்
சந்திக்கின்றன .
இதில் I1 மற்றும் I4 மின்னோட்டங்கள்
புள்ளியை நோக்கியும் . I2மற்றும் I3 மின்னோட்டங்கள்
புள்ளியிலிருந்து வெளினோக்கியும்
பாய்வதைக் காணவும்.
மேலும்
புள்ளியை நோக்கி வரும்
மின்னோட்டத்தை +
அடையாளம்
மூலமும்,
புள்ளியிலிருந்து
வெளிநோக்கிச் செல்லும்
மின்னோட்டத்தை -
அடையாளம்
மூலமும் குறித்தால்
மின்னோட்டங்களின் குறியியற்
கூட்டுத்தொகை கிர்ச்சாப்
விதிப்படி பூஜ்யம் ஆகும்.
I1 – I2 –
I3 + I4 = 0
I1 + I4 = I2 +
I3
voltage law:
ஒரு
குளோஸ்டு மின்சுற்றில் உள்ள பல
மின் தடைகளில் ஏற்படும்
மின்னழுத்த இறக்கங்களின்
(Voltage drop) குறியியற்
கூட்டுத் தொகையுடன் அந்த
சுற்றில் உள்ள EMF(voltage)களின்
குறியியற் கூட்டுத்தொகையை கூட்டினால்
பூஜ்யம் கிடைக்கும்.
அதாவது:
ABC என்பது
ஒரு முற்று பெற்ற மின்சுற்று.
அதில் battery
யின் மூலம்
'E' volt மின்னழுத்தம்செலுத்தப்படுகிறது.
ABக்கு
இடையே ஏற்படும் மின்னழுத்த
இறக்கம் = +I1 R1 volt
BCக்கு
இடையே ஏற்படும் மின்னழுத்த
இறக்கம் = +I2 R2 volt
CAக்கு
இடையே ஏற்படும் மின்னழுத்த
இறக்கம் = +I3 R3 volt
Battery யில்
ஏற்படும் மின்னழுத்த இறக்கம்
= - E volt
எனவே
கிர்ச்சாப் விதின் படி:
I1 R1 + I2 R2 + I3 R3 –
E = 0
I1 R1 + I2 R2 + I3 R3 = E
மொத்த
மின்னழுத்த இறக்கம் battery
யின்
மின்னழுத்ததிற்கு சமமாக
இருக்கும்.
Gustav Robert Kirchoff was a German physicist born on March 12, 1824, in Konigsber, Prussia. Gustav Kirchoff's first research topic was on the conduction of electricity. As a result of this research, Kirchoff wrote the Laws of Closed Electric Circuits in 1845. These laws were eventually named after their author, which are now known as Kirchoff's Current and Voltage Laws.