எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் (ELCB):
இதுவும் பல அளவுகளில் கிடைக்கின்றன. ஒயர்கள் மற்றும் மின் சாதனங்கள் வழியாக மின்சாரம் செல்லும் போது பேஸ் லைன், நியூட்டர்ல் லைன், எர்த் லைன் ஆகியவை ஒன்றோடு ஒன்று ஷாட் ஆகும் சமயத்தில் இந்த ELCB ஆனது ஆப் ஆகி அதாவது ட்ரிப் ஆகி மின்சாரத்தை நிருத்திவிடும்.
பிறகு பழுதை சரிசெய்து நாம் இந்த ELCB-யை ஆன் செய்து கொள்ளலாம். இதில் 3பேஸ், சிங்கில் பேஸ் இணைப்பு கொடுக்கு வகையில் இதன் துவாரங்கள் இருக்கும்.
3பேஸ் என்றால் நான்கு ஒயர்கள் இணைக்க நான்கு துவாரங்கள் இருக்கும். சிங்கில் பேஸ் என்றால் இண்டு ஒயர்கள் இணைக்க இரண்டு துவாரங்கள் இருக்கும். இதன் கீழ் துவாரம் இன்புட், மேல் துவாரம் அவுட்புட் ஆகும்.
வீடுகளில் எர்த் அல்லது நியூட்ரல் சிறிது லீக் ஆனாலும் ELCB-ஆனது ட்ரிப் ஆகிவிடும். இதன் விலை அதிகம் என்ற காரணத்தினால் பெரும்பாலும் பயன்படுத்தமாட்டார்கள் ஆனால் இதைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது ஆகும்.
மினியேச்சர் சர்க்யூட் பிரேக்கர் (MCB) மற்றும் ரெஸிடுவல் கரென்ட் சர்க்யூட் பிரேக்கர் (RCCB):
நாம் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் போது படுக்கை அறை, சமையல் அறை, நூலக அறை என்று நாம் ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக ஒயர்களைப் பிரித்து எடுத்துச் செல்வோம். இதை சர்க்யூட் என்று சொல்வோம்.
அதாவது படுக்கை அறை சர்க்யூட், நூல அறை சர்க்யூட், சமையல் அறை சர்க்யூட் என்று அர்த்தம்.
இந்த ஒவ்வொரு சர்க்யூட்டுக்கும் ஒரு பியூஸ் வைப்பது வழக்கம் ஆனால் மின்சார நிலையங்களில் பழுது ஏற்பட்டு பியூஸ் எரியும் போது ஒவ்வொரு முறையும் நாம் மாற்ற வேண்டும். எனவே இந்த இடங்களில் எல்லாம் நாம் MCB-யை பயன்படுத்துகிறோம்.
நாம் வீடுகளில் எத்தனை அறைகள் வைத்து இருந்தாலும் அத்தனை அறைகளுக்கும் MCB வைப்பது நல்லது. எந்த அறையில் உள்ள சர்க்யூட் பழுது ஏற்படுகிறதோ அந்த சர்க்யூடின் MCB-ஆனது ட்ரிப்பாகிவிடும். பழுது ஏற்பட்டு விட்டது என்று மெயின் சுவிட்சை ஆப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
MCB என்பது இன்றைக்கு மிக மிக இன்றியமையாதது ஆகும்.
குறிப்பு:
RCCB-யை MCB-க்கு முன்பாக இனைக்க வேண்டும்.
குறிப்பு:
RCCB-யை MCB-க்கு முன்பாக இனைக்க வேண்டும்.