பாசமிகு நண்பர்களே அனைவருக்கும் என் வணக்கம்,
இந்தப் பதிவின் மூலமாக உங்களை சந்திப்பதில் நான் மிக மகிழ்ச்சியடைகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தொழில்நுட்பத்தைப் பற்றிய தகவலை எழுதிக் கொண்டிருந்த்தேன் என்னுடைய துறைகளைச் சார்ந்தவைகளை மட்டும். (மின்னியல் மற்றும் மின்னனுவியல்) இந்தப் பதிவு சற்று வேறுபட்டது ஆகும் ஆமாம். புத்தகத்திற்கு செய்யும் முதலீடு என்பது முதலீடு அல்ல அது மூலதனம் ஆகும் என்பார்கள் அறிவார்ந்த பெரியவர்கள். ஆமாம் நண்பர்களே புத்தகம் வாங்கும் பழக்கத்தைப் பற்றிய தகவல்களைத் தான் சொல்லவறுகிறேன். இன்றைய காலகட்டத்தில் நன்மிடையே பெரும்பாலும் புத்தகம் படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

புத்தகம் ஏன் படிக்க வேண்டும்?
- தெளிவாகவும் அழகாகவும் பேச.
- எழுத்துக்களை தவறு இல்லாமல் எழுத.
- மற்றவர்களிடம் பேசும்போது சரியான எடுத்துக் காட்டுகளுடன் பேச.
- வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ள.
- படிப்பதால் மூச்சு சீராகும்.
- இதயத்தின் துடிப்பு சீராகும்.
- ஒரு நாளைக்கு 60 பக்கம் படிப்பதால் முகம் அழகாகும்.
- எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக எந்த ஒரு குழப்பமும் இன்றி எடுத்துச் சொல்ல முடியும்.
- நம்மைப் பற்றிய சிந்தனை புத்தகம் படிப்பதன் விளைவாக அது தொலைநோக்குச் சிந்தனையாகும் வாய்ப்பு கிட்டும்.
- நல்லவை எவை தீயவை எவை என்று பகுத்தறியும் மனபக்குவம் கிடைக்கும்.
- நம்மிடையே இருக்கும் மேற்கத்திய கலாச்சார சாயல் முற்றிலும் மறைந்து அழிந்து போகும்.
- நம்முடைய தாய்மொழிமேல் தனிமதிப்பு உருவாகும்.
- அறிவியல் சிந்தனை கிடைக்கும்.
- தந்தைப் பெரியார் சொல்வதைப்போல் படிப்பு என்பது வேறு அறிவு என்பது வேறு என்பது நமக்கு தெளிவாகப் புரியும்.
- மக்களாட்சி பற்றிய சரியான சிந்தனை வரும்.
படிப்பதால் நான் புரிந்து கொண்ட விஷயம்.
உள்மனம், வெளிமனம் என்று ஒன்றுமே கிடையாது உள்மனம், வெளிமனம் என்பவை மூளைதான். நம்முடைய உடல் உறுப்புகளிலேயே சிந்திக்கும் ஆற்றல் பெற்ற உறுப்பு மூளைமட்டும் தான் நீங்கள் நன்றாக என்னிப்பார்த்தால் தெளிவாக புரியும். இதயம் என்பது நம்முடைய குருதியை சீர்செய்வது மட்டுமே என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
என்னிடம் உள்ள புத்தகங்களை ஸ்கேன் செய்து உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.
நண்பர்களே இது என்னுடைய கித்தாப்பை காட்டுவதற்காக அல்ல. புத்தகம் படிக்கும் ஆர்வத்தை உங்களிடையே தூண்டுவதற்காக என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
>>>>>விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்<<<<<<