மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

What is Resistance ? மின்தடை(Resistance) பற்றிய தெளிவான விளக்கம்.


மின் சுற்று(electric circuit) மின்னோட்டத்திற்கு (current) தரும் எதிர்ப்பை மின்தடை(Resistance) என்கிறோம். இதன் அலகு ஓம்(ohm) ஆகும். இதை 'R' என்ற எழுத்து கொண்டு குறிக்கிறோம்.



உதாரணமாக நம் குடும்பத்தில் அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே சண்டை வந்துவிட்டால் அண்ணன் தம்பியை அடிப்பதற்கு "என்னடா சொன்ன நாயே "என்று சொல்லிக்கொண்டே ஒரு பெரிய கட்டையை எடு த்துக் கொண்டு அடிக்க வரும் போது அவனுடைய அம்மா அல்லது அப்பா உடனே வந்து தடுத்துவிட்டு சமாதானம் பேசுவார்கள் அப்படி அவர்கள் பேசிமுடித்த பிறகு அண்ணன் சமாதானம் ஆவதுடன் அவனுடைய வேகம் குறையும்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது:
அண்ணனுடைய கோபமும் வேகமும் தான் - ஒரு கடத்தியின் வழியாக வரக்கூடிய மின்னோட்டம் (current).
அவனுடைய கோபத்தை தடுத்து சமாதானத்தை ஏற்படுத்திய தந்தை தான் - மின்தடை(Resistance).
அப்படி தந்தை தடுக்காமல் இருந்திருந்தால் தம்பியின் மண்டை உடைந்திருக்கும் இந்த தம்பி தான் - பல்ப்(light).

மெலும் கடத்தியின் வழியாக வரும் அதிகமான மின்னோட்டதை தாங்க முடியாமல் பல்ப்(light) அனது நொருங்கி இருந்திருக்கும்.
இவ்வாரு நடக்காமல் ஒரு மின்சுற்றின் (electric circuit) வெளிப்பகுதியில் (out put) இனைக்கப்பட்டிருக்கும் பல்ப் மற்றும் எதாவது load ற்கு கடத்திகள் (conductor) வழியாக வரும் அதிகமான மின்னோட்டத்தை குறைத்து அவற்றிற்கு தேவையான அளவு மின்னோட்டத்தை கொடுக்கவே இந்த மின்தடை(Resistance) பயன்படுகிறது.

மேலும் ஒவ்வொரு கடத்திக்கும்(conductor) ஒரு குறிப்பிட்ட அளவு மின்தடை இருக்கும் அது கீழ்க்கண்ட காரணிகளை(factor) பொறுத்து மாறுபடுகிறது:

  1. மின்தடையானது கடத்தியின்(conductor) நீளத்திற்கு(L) நேர்விகித்தில் இருக்கும்.(directly proportional)
  2. மின்தடையானது கடத்தியின் குறுக்கு வெட்டுப் பரப்பிற்கு(cross sectional area) (a) எதிர்விகிதத்தில் இருக்கும்.(inversely proportional)
  3. மின்தடையானது கடத்தியின் தன்மைக்கு நேர்விகிதத்தில் இருக்கும்.( directly proportional)
     3(a). இந்த கடத்தியின் தன்மையைத்தான் specific resistance                அல்லது resistivity என்று அழைக்கப்படுகிறது.
கடத்தியின் நீளம் (length of conductor) = l

கடத்தியின் குறுக்கு வெட்டுப் பரப்பு = a
(cross sectional area)

கடத்தியின் தன்மை ρ

(specific resistance அல்லது resistivity)


ஒரு கடத்தியின் தன்மை (specific resistance அல்லது resistivity of conductor) =


Series and parallel resistors:

Series:



              File:Resistors in series.svg


Parallel:



A diagram of several resistors, side by side, both leads of each connected to the same wires

\frac{1}{R_\mathrm{eq}} = \frac{1}{R_1} + \frac{1}{R_2} + \cdots +  \frac{1}{R_n}


நாம் எலக்ட்ரிகல் quantity யான மின்னோட்டம் (current),மின்னழுத்தம்(voltageமற்றும் மின்தடை(resistance)ஆகியவைகளை பார்த்தோம்அடுத்த பதிவில் இருந்து செமிக்கண்டக்டர்களைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.


பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.