மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

புத்தகம் ஏன் படிக்க வேண்டும்?

பாசமிகு நண்பர்களே அனைவருக்கும் என் வணக்கம்,
      இந்தப் பதிவின் மூலமாக உங்களை சந்திப்பதில் நான் மிக மகிழ்ச்சியடைகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தொழில்நுட்பத்தைப் பற்றிய தகவலை எழுதிக் கொண்டிருந்த்தேன் என்னுடைய  துறைகளைச் சார்ந்தவைகளை மட்டும். (மின்னியல் மற்றும் மின்னனுவியல்) இந்தப் பதிவு சற்று வேறுபட்டது ஆகும் ஆமாம். புத்தகத்திற்கு செய்யும் முதலீடு என்பது முதலீடு அல்ல அது மூலதனம் ஆகும் என்பார்கள் அறிவார்ந்த பெரியவர்கள். ஆமாம் நண்பர்களே புத்தகம் வாங்கும் பழக்கத்தைப் பற்றிய தகவல்களைத் தான் சொல்லவறுகிறேன். இன்றைய காலகட்டத்தில் நன்மிடையே பெரும்பாலும் புத்தகம் படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
புத்தகம் ஏன் படிக்க வேண்டும்?
  • தெளிவாகவும் அழகாகவும் பேச.
  • எழுத்துக்களை தவறு இல்லாமல் எழுத.
  • மற்றவர்களிடம் பேசும்போது சரியான எடுத்துக் காட்டுகளுடன் பேச.
  • வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ள.
  • படிப்பதால் மூச்சு சீராகும்.
  • இதயத்தின் துடிப்பு சீராகும்.
  • ஒரு நாளைக்கு 60 பக்கம் படிப்பதால் முகம் அழகாகும்.
  • எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக எந்த ஒரு குழப்பமும் இன்றி எடுத்துச் சொல்ல முடியும்.
  • நம்மைப் பற்றிய சிந்தனை புத்தகம் படிப்பதன் விளைவாக அது தொலைநோக்குச் சிந்தனையாகும் வாய்ப்பு கிட்டும்.
  • நல்லவை எவை தீயவை எவை என்று பகுத்தறியும் மனபக்குவம் கிடைக்கும்.
  • நம்மிடையே இருக்கும் மேற்கத்திய கலாச்சார சாயல் முற்றிலும் மறைந்து அழிந்து போகும்.
  • நம்முடைய தாய்மொழிமேல் தனிமதிப்பு உருவாகும்.
  • அறிவியல் சிந்தனை கிடைக்கும்.
  • தந்தைப் பெரியார் சொல்வதைப்போல் படிப்பு என்பது வேறு அறிவு என்பது வேறு  என்பது நமக்கு தெளிவாகப் புரியும்.
  • மக்களாட்சி பற்றிய சரியான சிந்தனை வரும்.
இவை அனைத்தும் நிரைவேர வேண்டும் என்றால் பலதரப்பட்ட புத்தகங்களை படிக்க வேண்டும்.
படிப்பதால் நான் புரிந்து கொண்ட விஷயம்.
உள்மனம், வெளிமனம் என்று ஒன்றுமே கிடையாது உள்மனம், வெளிமனம் என்பவை மூளைதான். நம்முடைய உடல் உறுப்புகளிலேயே சிந்திக்கும் ஆற்றல் பெற்ற உறுப்பு மூளைமட்டும் தான் நீங்கள் நன்றாக என்னிப்பார்த்தால் தெளிவாக புரியும். இதயம் என்பது நம்முடைய குருதியை சீர்செய்வது மட்டுமே என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

என்னிடம் உள்ள புத்தகங்களை ஸ்கேன் செய்து உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.
நண்பர்களே இது என்னுடைய கித்தாப்பை காட்டுவதற்காக அல்ல. புத்தகம் படிக்கும் ஆர்வத்தை உங்களிடையே தூண்டுவதற்காக என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.



































>>>>>விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்<<<<<<

மின்மாற்றி தொடர்-6 (Transformer -6)

ஒரு மின்மாற்றியில் ஏற்படக்கூடிய இழப்புகள் (Losses of Transformer):
1.இரும்பு பாகமாக இருக்கக்கூடிய core -ல் ஏற்படும் இழப்புகள் - Iron Losses or Core Loss
2.Core -ல் சுற்றப்பட்டுள்ள வைண்டிங்குகள் எனப்படும் செம்புக்கம்பிகளில் மின்னோட்டம் பாயும் போது ஏற்படும் இழப்புகள் - Copper Loss

Iron Loss or Core Loss:

மின்மாற்றியின் core ஆனது இரும்பினால் செய்யப்பட்டிருக்கும். மேலும் இது AC supply யின் மூலமாக வைண்டிங் சுற்றப்பட்டுள்ள காந்த புலத்தை தோற்றுவித்து செயல்படுவதால் இதில், Hysteresis Losses மற்றும் Eddy Current Losses ஆகிய இருவகை இழப்புகள் தோன்றுகின்றன.
கவனிக்க:
நண்பர்களே நான் கூறிய வைண்டிங்கின் உள் மின்தடை இழப்பு என்றால் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு மின்னோட்டம் செல்லக்கூடிய கம்பிகளிலுமே குறிப்பிட்ட அளவு மின்தடையானது இருக்கும். இதனையே நாம் Internal Resistance என்கிறோம்.
அதாவது:
Iron Losses = Hysteresis Loss + Eddy Current Loss ஆகும்.
இந்த Loss ஐ மின்மாற்றியின் திறந்த மின்சுற்று சோதனை (Transformer Open Circuit Test) மூலமாக கண்டுபிடிக்கலாம்.

செம்புக்கம்பி இழப்புகள் (Copper Loss):

மின்மாற்றியின் வைண்டிங்குகளில் மின்னோட்டம் பாயும் பொழுது அந்த வைண்டிங்கின் உள் இருக்கக்கூடிய மின்தடையினால் ஏற்படும் வெப்ப இழப்புகளே Copper Loss எனப்படும்.
அதாவது,
மின்னோட்டம் மற்றும் மின்தடை இவையிரண்டும் சேர்ந்து ஒரு வைண்டிங்கில் வெப்பத்தை ஏற்படுத்துகிறது இதனையே வெப்ப இழப்பு என்கிறோம்.
இந்த copper loss ஆனது மின்மாற்றியின் இரண்டு வகையான வைண்டிங் அமைப்புகளிலுமே ஏற்படும்.
அதாவது,
copper loss மின்மாற்றியின் Primary மற்றும் Secondary வைண்டிங் இரண்டிலுமே ஏற்படும்.
இதனையே,

இந்த Loss ஆனது மின்மாற்றியுடன் இணைக்கப்படும் Load ஐப் பொறுத்து மாறுப்பட்டுக் கொண்டே இருக்கும். எனவே, இதை variable loss என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும் இந்த copper loss ஐ மூடிய மின்சுற்றின் மூலமாக (short circuit) கண்டறியலாம்.




மின்மாற்றி தொடர்-5 (Transformer -5)

Regulation என்றால் என்ன?
Regulation என்பது ஒரு மின்மாற்றியில் அதன் secondary வைண்டிங்கில் பழு (Load) இல்லாத நிலைக்கும், பழு உள்ள நிலைக்கும் இடையே நிலவும் மின்னழுத்தங்களின் வித்தியாசத்திற்கும், Load இல்லாத நிலையில் நிலவிய மின்னழுத்தத்திற்கும் உள்ள விகிதாச்சாரம் ஆகும்.


Transformer Efficiency:
ஒரு Transformer Efficiency யை கீழ்காண்ட சமன்பாடு மூலம் நாம் கணக்கிடலாம்.

மின்மாற்றியில் ஏற்படும் இழப்புகள் (Losses):
நான் ஏற்கனவே சொன்னதைப் போல மின்மாற்றியில் எந்தவித அசையும் பாகங்களும் இல்லாததால் Friction மற்றும் Windage முதலியவற்றால் ஏற்படும் இழப்புகள் ஏதும் கிடையாது. எனவே, மற்ற மின் இயந்திரங்களைக் காட்டிலும் மின்மாற்றியின் Efficiency அதிகமாக இருக்கும். Efficiency Losses குறைவாகவே இருக்கும்.


மின்மாற்றி தொடர்-4 (Transformer -4)

Equivalent Circuit எதற்காக?
எந்தவொரு Electrical Devices ஐயும் இந்த Equivalent Circuit ஆல் அதன் செயல்திறன் மற்றும் மின்னழுத்த இறக்கம் (Voltage Drops) போன்றவற்றை எளிமையான முறையில் ஆராயலாம்.
Vector Diagram எதற்காக?
மின்மாற்றியானது AC யில் வேலை செய்யும் போது அதன் Primary மற்றும் Secondary வைண்டிங்குகளில் நிலவும் மின்னழுத்த அளவுகள் மற்றும் மின்னழுத்த இறக்கம் (Voltage Drop) மற்றும் மின்னோட்டம் ஆகிவற்றின் திசையை வரைபடம் மூலமாக வரைவதையே Vector Diagram என்கிறோம்.

நல்ல மின்மாற்றியை (Transformer) தேர்ந்தெடுப்பது எப்படி?
நல்ல மின்மாற்றியை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் அதனுடைய Efficiency மற்றும் Regulation மதிப்புகளை நன்கு ஆராய வேண்டும்.

இந்த Efficiency மற்றும் Regulation ஆகியவற்றை மின்மாற்றியில் சோதிப்பதற்கு Primary வைண்டிங்கையோ அல்லது Secondary வைண்டிங்கையோ நாம் பயன்படுத்தலாம்.



மின்மாற்றி தொடர்-3 (Transformer -3)

EMF Equation எதற்காக?
ரு மின்மாற்றியில் தூண்டப்படும் மின்காந்த புலத்தின் (Induced emf) அளவு நமக்கு மிக அவசியமாகிறது.
அதாவது,  core -ன் குறுக்குவெட்டை பொறுத்தும் அதன் மின்காந்த புல அடர்த்தியைப் (Flex Density) பொறுத்தும், Primary மற்றும் Secondary வைண்டிங்குகளில் அமையக்கூடிய சுற்றுகளின் எண்ணிக்கையை காணவே இந்த சமன்பாடு (Equation) பெரிதும் உதவுகிறது.

Primary Side

E1 = 4.44fN1 Øm
E1 = 4.44fN1BmA.    (Øm= BmA)

Secondary Side

E2 = 4.44fN2 Øm
E2 = 4.44fN2BmA.    (Øm= BmA)

Transformer on No Load:
அதாவது மின்மாற்றியின் secondary  -யில் எந்தவிதமான பழுவும் (Load) இணைப்பு செய்யப்படாமல் இருந்தால் அது No Load என்று கருதப்படுகிறது.


Transformer on Load:
மின்மாற்றியின் secondary -யில் பழுவானது (Load) இணைப்புச் செய்யப்பட்டு இருந்தால் அது ON Load என்று கருதப்படுகிறது.

காந்தபுல கசிவு or காந்தவிசைக் கோடுகள் (Leakage Fluxes):
நாம் AC Supply யை மின்மாறியின் Primary வைண்டிங்கில் கொடுக்கும் போது அந்த வைண்டிங் ஆனது core -ல் சுற்றப்பட்டு இருக்கும்.  அதில் மின்காந்த புலம் உருவாகி core -ன் வழியாக சென்று secondary வைண்டிங்கை சென்றடையும் அப்போது core -ல் சுற்றப்பட்டுள்ள வைண்டிங் சுருள்களுக்கு இடையே காற்று இடைவெளி வழியாகவும் சென்று காந்த புலமானது தனது சுற்றுப் பாதையை முடித்துக் கொள்ளும்.  இதனையே Leakage Flux என்கிறோம்.

மின்மாற்றி தொடர்:

மின்மாற்றி தொடர்-1 (Transformer -1)
மின்மாற்றி தொடர்-2 (Transformer -2)
மின்மாற்றி தொடர்-3 (Transformer -3)

மின்மாற்றி தொடர்-2 (Transformer -2)

மின்மாற்றியின் வகைகள்:

தை மூன்று வகைகளாக பிரிக்கலாம்

1. Core Type
2. Shell Type
3. Berry Type


இந்த வகை மின்மாற்றியில் Primary மற்றும் Secondary வைண்டிங்குகள் core -ன் இரு எதிர் எதிர் Limbs களில் சுற்றப்பட்டு இருக்க்கும்.


இதில் Primary மற்றும் Secondary வைண்டிங்குகளைச் சுற்றி core இருக்கும்.  மேலும், இதில் core ஆனது Primary மற்றும் Secondary வைண்டிங்குகளுக்கு ஒரு பாதுகாப்பு சாதனமாக செயல்படும் வகையில் இருக்கும்.


பொதுவாகவே,  இந்த வகையான மின்மாற்றிகள் பயன்பாட்டில் இல்லை.

மின்மாற்றியின் Core வகைகள்:

1. L Type


2. E Type


3. I Type



இவையனைத்தும் சிலிக்கான் கலந்த எஃகு னால் அடுக்கப்படும்.

மின்மாற்றி தொடர்-1 (Transformer -1)

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.