மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

USB-ஐ பற்றிய ஒரு பார்வை

இந்த கட்டுரையானது USB ஐ பற்றிய மேலோட்டமான பார்வை ஆகும். இருந்தாலும் இணையதள நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நன்புகிறேன்.

USB Connector:

USB என்பதன் விரிவாக்கம் Universal Serial Bus Connector என்பதாகும்.


இதன் செயல்பாடு Power மற்றும் Data பரிமாற்றம் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படிகின்றன.

வளர்ந்த மற்றும் பெரிய நிறுவனங்களான இன்டெல்(Intel), மைக்ரோசாப்ட்(Microsoft), டெல்(Dell), ஐ.பி.எம்(IBM) போன்ற நிறுவனங்களின் கணினி சாதனங்களை இணைக்கப் பயன்படுகிறது.

மேலும் இந்த USB-ஆனது Mouse, Keyboard, Cameras, Printers, Scanners, Laptop ஆகியவற்றின் Power cable ஆகவும் மற்றும் Data Cable ஆகவும் பயன்படுகின்றது.

USB ஆனது கணினியின் சாதனங்களில் மட்டுமல்லாமல் இது தொலைக்காட்சி(Television), மொபைல் சார்ஜர் (Mobile Phone Charger), Multimedia Players ஆகியவற்றிலும் இனிமேல் வரவிறுக்கும் சாதனங்களிலும் இதன் பயன்படுகள் இருக்கும் என்பது தின்னம்.

இந்த USB Connector ஆனது அதன் வடிவம்(Shape) மற்றும் பின்களின்(Pins) எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து பல்வேறு வகையான  USB Connector-ள் உள்ளன.

நான் இங்கு 4-ங்கு பின்கள் உடைய Standard “A” type USB Connector ஐ பற்றி எழுதியுள்ளேன்.

உலோக உறை(Metal Casing):



இது  USB Connector-ன் ஆயுளை நீடிக்கிறது மற்றும் Mechanical Stresses - இயந்திர அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கிறது.

இதன் இரண்டு வெட்டுப் பிரிவுகள் (இரண்டு ஓட்டைகள்) ஆனது  Female  USB Connector உடன் இணைப்பை ஏற்படுத்தப் பயன்படுகின்றது.

இது தான் Male  USB Connector.

இது தான் Female  USB Connector.

'A' type  USB Connector-ன் Pin-களின் விவரம்:

Pin 1 : இது Voltage (+) [மின்னழுத்தம்]
Pin 2 : Data (+)
Pin 3 : Data (-)
Pin 4 : Ground (-) [தரை இணைப்பு]

'A' type  USB Connector Pin-களின் கலர் விவரங்கள்: 


Pin 1: Voltage (+) சிவப்பு நிரம்
Pin 2 : Data (+) பச்சை நிரம்
Pin 3 : Data (-) வெள்ளை நிரம்
Pin 4 : Ground (-) கருப்பு நிரம்.

இதில் Pin 1 மற்றும் Pin 2 ஆகியவற்றிற்கு மின்னழுத்தம்(Voltage) கொடுக்க வேண்டும்.

மேலும் Pin 2 மற்றும் Pin 3 ஆகியவற்றிற்கு தரவு(Data) இணைப்பு கொடுக்க வேண்டும்.

USB – Universal Serial Bus-களின் படங்கள்:











உபுண்டு OS-ல் LED-யின் மதிப்பு காணல்(LEDs)

LEDs:
இது LEDயின் கலரை வைத்து மதிப்பைக் காண்பதற்கான எளிமையான ஒரு software ஆகும். இதைப் பயன்படுத்த வேண்டும் என்றால் Ubuntu operating system-த்தை பயன்படுத்த தெரிய வேண்டும்.

உபுண்டு:
நான் பயன்படுத்தக்கூடிய operating system Ubuntu 12.04 ஆகும்.


LEDs (Light Emitting Diode):

செயல் 1: 
முதலில் நாம் உபுண்டு operating system-த்தை நம்முடைய கணிணியில் நிறுவ வேண்டும்.

உபுண்டு பதிவிறக்கத் தளம்: ubuntu, noobs.

செயல் 2:
OS-ஐ நிறுவிய பிறகு Ubuntu-வின் search box-ல் Ubuntu software center என்று type செய்ய வேண்டும். பிறகு அதை தேர்வு செய்ய வேண்டும்.



செயல் 3: 
software center-ல் உள்ள search box-ல் LEDs என்று type செய்ய வேண்டும்.




செயல் 4:
வரக்கூடிய LEDs software- ஐ install செய்துகொள்ள வேண்டும்.

செயல் 5:
உபுண்டுவின் search box-ல் சென்று LEDs என்று type செய்ய வேண்டும். பிறகு அதை தேர்வு செய்ய வேண்டும்.



செயல் 6:
இப்போது உங்கள் கணினியின் முகப்புத் திரையில் LEDs software ஆனது தோன்றும்.


இதன் சிறப்பு:
1.Colorஎன்று இருக்கும் இடத்தில் நமக்கு தேவையான கலரைத் தேர்வுசெய்யலாம்.


2.Voltage என்பதில் நமக்குத் தேவையான Voltage-ஐ தேர்வு செய்யலாம்.
3.Color-ஐ தேர்வு செய்தால் Voltage-ஐ தேர்வு செய்யவேண்டியதில்லை. Voltage-ஐ தேர்வு செய்தால் Color-ஐ தேர்வு செய்யவேண்டியதில்லை.
4.Color-ரைத் தேர்வு செய்து கொண்டு  information என்ற பொத்தானை அழுத்தினால் அந்தக் கலரில் உள்ள LED-ஐ பற்றிய தகவல் திரையில் தோன்றும். மேலும் அவை எந்த உலோகத்தால் செய்யப்பட்டது என்ற தகவல் தெளிவாக திரையில் தெரியும்.


5.மேலே 1,2,3-ல் சொன்னதைப் போல  கலரைத் தேர்வு செய்து கொண்டு  calculate என்ற பொத்தானை அழுத்தினால்  அந்த  LED-யின் மின்னழுத்த அளவு தெரியும்.


6.About என்ற பொத்தானை அழுத்தினால் அந்த  software-ஐ பற்றிய தகவலை தெரிந்து கொள்ளமுடியும்.


7.Quit என்ற பொத்தானை அழுத்தினால் வெளியேறலாம்.


உபுண்டு OS-ல் மின்தடையின் மதிப்பு காணல்(G Resistor)

G Resistor:
இது மின்தடையின் மதிப்பைக் காண்பதற்கான எளிமையான ஒரு software ஆகும். இதைப் பயன்படுத்த வேண்டும் என்றால் Ubuntu operating system-த்தை பயன்படுத்த தெரிய வேண்டும்.
உபுண்டு:
நான் பயன்படுத்தக்கூடிய operating system Ubuntu 12.04 ஆகும்.


g Resistor:
செயல் 1:
முதலில் நாம் உபுண்டு operating system-த்தை நம்முடைய கணிணியில் நிறுவ வேண்டும்.
உபுண்டு பதிவிறக்கத் தளம்: Noobs labGNU TAMIL.
செயல் 2:
OS-ஐ நிறுவிய பிறகு Ubuntu-வின் search box-ல் Ubuntu software center என்று type செய்ய வேண்டும். பிறகு அதை தேர்வு செய்ய வேண்டும்.


செயல் 3:
software center-ல் உள்ள search box-ல் g resistor என்று type செய்ய வேண்டும்.




செயல் 4:
வரக்கூடிய g resistor software- ஐ install செய்துகொள்ள வேண்டும்.
செயல் 5:
உபுண்டுவின் search box-ல் சென்று g resistor என்று type செய்ய வேண்டும். பிறகு அதை தேர்வு செய்ய வேண்டும்.


செயல் 6:
இப்போது உங்கள் கணினியின் முகப்புத் திரையில் g resister software ஆனது தோன்றும்.

இதன் சிறப்பு:
1.Type of resistor என்பதில் 4 band  5 band  6 band என்று இருக்கும் நமக்கு தேவையானதை தேர்வுசெய்யலாம்.
2.value 1 மற்றும் value 2 என்பதில் நமக்குத் தேவையான கலர்களைத் தேர்வு செய்யலாம்.
3.Multiply மற்றும் tolerance இரண்டிலும் நமக்கும்த் தேவையான கலரைத் தேர்வு செய்யலாம். இருதியாக நமக்கு எத்தனை ஓம், கிலோ ஓம் , மற்றும் மெகா ஓம் தேவை என்பதை துள்ளியமாகக் காட்டிவிடும்.


சட்டத்தின் மூலம் எதயும் செய்யலாம்

  • வீட்டிற்கு ஒரு கார் வைத்துக் கொள்ளாம் ஆனால் மாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட கிலோமீட்டருக்கு மேல் ஓட்டக்கூடாது.


  • இருசக்கர வாகணங்கள் வைத்துள்ளவர்கள் ஒரு மாதத்திற்கு குறிப்பிட்ட லிட்டருக்கு மேல் பெட்ரோல் போடக்கூடாது.

AC-ஐ பயன்படுத்தக் கூடாது ஏன்?

ஒரு டன் ஏ.சி எவ்வளவு மின்னாற்றலை எடுக்கும்?
ஒரு டன் AC = 12000 Btu/hr

இங்கு Btu என்பதன் விரிவாக்கம்
B-British
T-Thermal
U-Unit

AC Terms – Definitions (மாறுதிசை மின்னோட்ட விதிமுறைகள் - வரையறைகள்)

Cycle 

AC voltage ஒரு முறை அதன் அளவிலும் திசையிலும் மாறி துவக்க நிலைக்கு வருவதற்கு cycle என்று பெயர். இதில் ஒரு +ve பாதியும் -ve பாதியும் உண்டு.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.