மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !
Showing posts with label குதிரை திரன். Show all posts
Showing posts with label குதிரை திரன். Show all posts

குதிரை திறன் (Horse Power) பற்றிய தெளிவான விளக்கம்.

மின்சார மோட்டாரிலிருந்து நாம் பெறக்கூடிய சக்தியின் அளவை குதிரை திறன் என்ற அலகால் குறிப்பிடுவது வழக்கம். இதைச் சுறுக்கமாக கெச்.பி (HP) என்றும் கூறப்படும். 1 கெச்.பி (1 HP) என்பது 746 வாட்ஸ் (Watts) (0.746 கிலோ வாட்ஸ்(KW)) என்ற மின்சக்தி அளவிற்கு சமம். சில மோட்டார்களில் கெச்.பி (HP) அளவு குறிப்பிடப் படாமல் கிலோ வாட்ஸ் அளவு குறிப்பிடப் பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு பம்பு மோட்டார் 0.75 கிலோ வாட்ஸ் (KW) எனில் அது ஒரு குதிரை சக்திக்கு (1 HP) சமம் ஆகும்.


சிறியது முதல் மிகப் பெரியது வரை பல சைஸ்களிலும், ஒன்றுக்கு குறைவான கெச்.பி (HP) முதல் ஆயிரக்கணக்கான கெச்.பி (HP) வரையுள்ள மோட்டார்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்றும் ஒன்றுக்கு குறைவான கெச்.பி (HP) உடைய மோட்டார்களுக்கு "பின்ன குதிரை சக்தி மோட்டார்" (Fractional Motor) என்று பெயர். ஒன்றுக்கு குறைவான எண்களை பின்னம் (Fraction) என்று சொல்வதால் இப்பெயர் வழக்கத்தில் உள்ளது. மின்விசிறி, மிக்ஸி, மின் ஆட்டுக்கள், ரெஃப்ரிஜிரேட்டர், ஏர் கன்டிஷ்னர், வீட்டு கிணற்றில் அமைக்கப்படும் பம்ப் மோட்டார் போன்றவைகளில் "பின்ன குதிரை சக்தி மோட்டார் " (Fractional Motor) தான் இருக்குமென்றாலும் தேவையைப் பொறுத்து அவை வெவ்வேறு வகையைச் சேர்ந்ததாக இருக்கு.

குறிப்பு:

ஒரு 5 கெச்.பி (HP) மோட்டார் எவ்வளவு பவரை எடுக்கும் என்பதை கணக்கிட 5*746 ஐ பெருக்கக் கிடைக்கும் 3730 வாட்ஸ் (Watts) மதிப்பு தான் 5 கெச்.பி (HP) மோட்டாரின் பவர் ஆகும். இதை கிலோ வாட்ஸில் (KW) பெறவேண்டும் என்றால் 1000ல் வகுக்க வேண்டும் (3730/1000) வகுத்துக் கிடைக்கும் மதிப்பு 3.73 கிலோ வாட்ஸ் (KW) ஆகும்.

// ஒன்றும் ஒன்றுக்கு குறைவான கெச்.பி (HP) உடைய மோட்டார்களுக்கு "பின்ன குதிரை சக்தி மோட்டார்" (Fractional Motor) என்று பெயர். //

எ.டு.கா: 0.5 HP மோட்டார் வகைகள். இதை ஹாஃப் கெச்.பி (Half HP motor) மோட்டார் என்று குறிப்பிடுவது வழக்கம்.


பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.