நான் இதை ஒரு புத்தகத்திலிருந்து படித்தேன் நூலாசிரியர் சு.வேங்கடாசலம், மும்பை
அவருக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
Global positioning system என்பதன் சுருக்கமான பெயர்தான் GPS. இதில் 24 செயர்க்கைக்கோள்கள் பங்கு எடுத்துகொள்கின்றன இவை அமெரிக்க மிலிட்டரி அப்ளிகேசன்களுக்காக அவர்களுடைய U.S.Department of defence மூலமாக ஆகாயத்தில் விடப்பட்டன. 1980களில் இந்த ஜிபிஎஸ் சிஸ்டம் மற்ற மக்களுக்காகப் பயன்பட அளிக்கப்பட்டது.
ஜிபிஎஸ் செயர்க்கைக்கோள்கள் பூமியை ஒரு நாளில் இரண்டு முறை வலம் வருகின்றன. அவை தங்களுடைய தற்போதைய இடத்தை எல்லா வேளையிலும் சிக்னல்கள் மூலமாக அனுப்பிக்கொண்டிருக்கும். ஜிபிஎஸ் ரிசிவர்கள் இந்தத் தகவல்களை பெற்றுக்கொள்ளும். பிறகு சிக்னல்கள் எந்த நேரத்தில் trasmit செய்யப்பட்டன ,எந்த நேரத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டன ஒத்துப்பார்க்கும்.