மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

ஆட்டோமேசன்-Automation

திவு குடும்பத்தார் மற்றும் வாசிப்பாளர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


       இந்தப் பதிவின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்சி. இந்த பதிவு என்பது மிகவும் முக்கியமானது இன்றைய காலகட்டத்திலும் சரி இனி வரவிருக்கும் காலங்களிலும் சரி ஆட்டோமேசன் என்பது தான் உலகம் என்றாகிவிட்டதை அனைத்து பொறியாளர்களும் அறிந்த ஒன்றே மின் பொறியாளர்கள் அவர்களுக்கு சொல்ல வேண்டியதே இல்லை.

       ஆட்டோமேசன் என்றால் என்ன மற்றும் அதன் பயன்கள் தான் என்ன ? என்ற கேள்வி எழும்போது. மனிதர்களின் வேலைப் பழுவை குறைத்து மனித மூளைக்கு வேலை கொடுப்பது என்று சொல்லலாம். அதாவது எதாவது ஒரு பொருளை வடிவமைக்க வேண்டும் என்றாலோ அல்லது அந்த பொருளை இயக்க தேவையான மின்சாரம் எந்த அளவில் கொடுக்க வேண்டும் மேலும் வடிவமைப்பு முடிந்த பிறகு அது எவ்வாறு இயங்கும் என்பதை முன்கூட்டியே பார்க்க உதவுவது இந்த ஆட்டோமேசன் என்று கூட சொல்லலாம்.

   PLC, SCADA, VSD ect.. போன்றவைகள் ஆட்டோமேசன் சாப்ட்வேர்கள் என்று பல அப்லிகேசன் சாப்ட்வேர்கள் உண்டு. குறிபாக மின்துறையைச் சார்ந்தவர்கள் இந்த சாப்ட்வேர்களைப் பயன்படுத்திதான் பல தொழிற்சாலைகளில் பணிபுரிகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிபாக நாம் இந்த சாப்ட்வேர்கள் மூலமாக ஒரு மின்சுற்றை வடிவமைத்து அதை சிமுளேசன் செய்து பார்த்துவிட்டு. பிறகு கணிணியின் மூலமாகவே பெரிய இயந்திரங்களை இயக்க முடியும். அதன் செயல்பாட்டையும் மாற்றியமைக்க முடியும்.

    இப்படிப்பட்ட ஆட்டோமேசன் பற்றிய தகவல்களை ஐந்து இணையதளத்தில் இருந்து மிகவும் தெளிவாக நாம் கற்றுக் கொள்ளலாம். ஆட்டோமேசன் பற்றிய பல எண்ணற்ற கட்டுரைகள் இதில் இருப்பது மற்றுமொறு அழகு. எனவே இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு எழுதப்பட்டதே இந்த கட்டுரை.

learn.automationdirect.com


இந்த தளத்தில் வீடியோ மற்றும் பல கட்டுரைகள் கிடைக்கின்றன.

இந்த தளம் மிகவும் இன்றியமையாததாக அனைத்துப் பொறியாளருக்கும் இருந்து வருகிறது. ஆட்டோமேசன் பற்றிய வகுப்புகள் அனைத்தும் வீடியோவில் கிடைக்கின்றன.

இது மிகவும் முக்கியமான தளம் இதில் 8600-ற்கும் மேற்பட்ட காட்டுரைகள் இடம்பெற்றுள்ளது.

control.com மற்றும் automationworld.com
இவை இரண்டும் ஆட்டோமேசன் பற்றிய பல தகவல்களை அள்ளித் தந்துள்ளன அனைத்தையும் பார்த்துப் படித்து பயன் பெறுக.
    
வாழ்க மனிதநேயம் !              வளர்க பகுத்தறிவு !

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.