மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

வீட்டு ஒயரிங் தொடர் - 3 (House wiring - 3)

எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் (ELCB):

இதுவும் பல அளவுகளில் கிடைக்கின்றன. ஒயர்கள்  மற்றும் மின் சாதனங்கள் வழியாக மின்சாரம் செல்லும் போது பேஸ் லைன், நியூட்டர்ல் லைன், எர்த் லைன் ஆகியவை ஒன்றோடு ஒன்று ஷாட் ஆகும் சமயத்தில் இந்த ELCB ஆனது ஆப் ஆகி அதாவது ட்ரிப் ஆகி மின்சாரத்தை நிருத்திவிடும்.

பிறகு பழுதை சரிசெய்து நாம் இந்த ELCB-யை ஆன் செய்து கொள்ளலாம். இதில் 3பேஸ், சிங்கில் பேஸ் இணைப்பு கொடுக்கு வகையில் இதன் துவாரங்கள் இருக்கும்.

3பேஸ் என்றால் நான்கு ஒயர்கள் இணைக்க நான்கு துவாரங்கள் இருக்கும். சிங்கில் பேஸ் என்றால் இண்டு ஒயர்கள் இணைக்க இரண்டு துவாரங்கள் இருக்கும். இதன் கீழ் துவாரம் இன்புட், மேல் துவாரம் அவுட்புட் ஆகும்.

வீடுகளில் எர்த் அல்லது நியூட்ரல் சிறிது லீக் ஆனாலும் ELCB-ஆனது ட்ரிப் ஆகிவிடும். இதன் விலை அதிகம் என்ற காரணத்தினால் பெரும்பாலும் பயன்படுத்தமாட்டார்கள் ஆனால் இதைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது ஆகும். 

மினியேச்சர் சர்க்யூட் பிரேக்கர் (MCB) மற்றும் ரெஸிடுவல் கரென்ட் சர்க்யூட் பிரேக்கர் (RCCB):

நாம் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் போது படுக்கை அறை, சமையல் அறை, நூலக அறை என்று நாம் ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக ஒயர்களைப் பிரித்து எடுத்துச் செல்வோம். இதை சர்க்யூட் என்று சொல்வோம்.


அதாவது படுக்கை அறை சர்க்யூட், நூல அறை சர்க்யூட், சமையல் அறை சர்க்யூட் என்று அர்த்தம். 

இந்த ஒவ்வொரு சர்க்யூட்டுக்கும் ஒரு பியூஸ் வைப்பது வழக்கம் ஆனால் மின்சார நிலையங்களில் பழுது ஏற்பட்டு பியூஸ் எரியும் போது ஒவ்வொரு முறையும் நாம் மாற்ற வேண்டும். எனவே இந்த இடங்களில் எல்லாம் நாம் MCB-யை பயன்படுத்துகிறோம்.


நாம் வீடுகளில் எத்தனை அறைகள் வைத்து இருந்தாலும் அத்தனை அறைகளுக்கும் MCB வைப்பது நல்லது. எந்த அறையில் உள்ள சர்க்யூட் பழுது ஏற்படுகிறதோ அந்த சர்க்யூடின்  MCB-ஆனது ட்ரிப்பாகிவிடும். பழுது ஏற்பட்டு விட்டது என்று மெயின் சுவிட்சை ஆப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

MCB என்பது இன்றைக்கு மிக மிக இன்றியமையாதது ஆகும்.

குறிப்பு:
RCCB-யை MCB-க்கு முன்பாக இனைக்க வேண்டும்.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.