மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

What is Voltage? மின்னழுத்தம் (Voltage) பற்றிய தெளிவான விளக்கம்.

கண்டக்டரில்(conductor) நான்கு எலக்ட்ரான்களுக்கு குறைவாக உள்ள பொருள் அதாவது (conductor property யில் நாம் மின்னோட்டத்தை ஏற்படுத்த)  அதாவது எலக்ட்ரான்களை நகர்த்த தேவைப்படும் மின்னழுத்ததையே(electrical pressure) voltage என்கிறோம்.

             உதாரணமாக நாம் ஒரு பெரிய பொருளை நகர்த்த வேண்டும் என்றால் அந்த பொருளின் கீழ்ப்பகுதியிலோ மேல்ப்பகுதியிலோ அல்லது நடுப்பகுதியிலோ நம் கையை வைத்து விசையுடன் சேர்ந்தார் போல் ஒரு அழுத்தத்தை கொடுப்போம்(man made mechanical pressure). நாம் அந்த பொருளிற்கு கொடுக்கும் அழுத்தம் அதிகமாக இருந்தால் அந்த பொருள் வேகமாக நகரும்
           ஆக நாம் கொடுத்த அழுத்தம் உயர் அழுத்தம் எனப்படும். அதுவே நாம் அந்த பொருளிற்கு குறைவான அழுத்தம் கொடுத்தால் அந்தப் பொருள் மெதுவாக நகரும். ஆக நாம் கொடுத்த அந்த அழுத்தம் குறை அழுத்தம் எனப்படும்.
நம்மால் கொடுக்கப்பட்ட இந்த அழுத்தத்தை நாம் கண்களால் பார்க்க முடுயாது.
எப்படி நாம் ஒரு மின் கடத்தா பொருளிற்கு அழுத்தம் கொடுத்து அந்த பொருளை நகர்த்துகிறோமோ. அதே போல்தான் மின்சார உற்பத்தி நிலையங்களில் (power plant) மின்னழுத்தத்தை கொடுத்து கடத்திகள் வழியாக மின்னோட்டத்தை செலுத்தலாம்.
உயர் மின்னழுத்தம் கொடுக்கும் பொழுது கடத்திகள் வழியாக அதிக மின்னோட்டம் செல்லும்.
குறைந்த மின்னழுத்தம் கொடுக்கும் பொழுது கடத்திகள் வழியாக குறைந்த மின்னோட்டம் செல்லும்.
          ஆக எப்படி மின்னழுத்தத்தை கூட்டி மற்றும் குறைத்து கொடுக்கும் பொழுது கடத்திகள் வழியாக மின்னோட்டம் கூட குறைய செல்கிறதோ, அதே போலதான் மின்னோட்டம் செல்லக்கூடிய அந்த கடத்தியின் (conductor) குறுக்கு வெட்டு பரப்பானது (அளவானது) அதிகமாக இருந்தால் மின்னோட்டம் அதிகமாக இருக்கும்.
கடத்தியின் அளவு(conductor -ன் குறுக்குவெட்டு பரப்பு) குறைவாக இருந்தால் மின்னோட்டம் குறைவாக இருக்கும் .

இவர்தான் மின்னழுத்தத்தை(Voltage) கண்டுபிடித்தவர். Born    18 February 1745Como, Duchy of Milan 

Known for Invention of the electric cell Discovery of methane volt Voltage Voltmeterபிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.