மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

2]Prefix, Factor, Symbols

Prefix                                                     Factor                                        Symbols

deci                                                      10^-1                                                d

centi                                                     10^-2                                                c

milli                                                       10^-3                                               m

micro                                                    10^-6                                              miu

nano                                                     10^-9                                                n

pico                                                      10^-12                                             p

kilo                                                      10^3                                                 k

mega                                                    10^6                                                M

giga                                                     10^9                                                G

tera                                                      10^12                                              T

1]Electrical அளவு மற்றும் SI அளவு

அளவு [quantity ]                   சின்னம் [symbols]     SI அளவு        சுருக்கம் [abbreviation ]

length                                             L,l                               meter                   m

mass                                               M,m                            kilogram               Kg

time                                                 T,t                              second                   S

current                                             I,i                                ampere                    A

electric charge                              Q,q                                coulomb               C

electric potential                           V,v                               volt                          V

resistance                                       R                                 ohm                      ohm

conductance                                  G                                  Siemens                  S

inductance                                     L                                  hentry                     H

capacitance                                  C                                  farad                      F

frequency                                      f                                  hertz                        Hz

force                                             F,f                                 newton                   N

energy,work                                 W,w                              joule                         J

power                                           P,p                                 watts                        w

magnetic flux                                by                                  weber                      wb

magnetic flux density                    B                                   tesla                        T

2]அடிப்படை மின்அறிவியல்-IIபொதுவாகவே electrical லில் தெரிந்து கொல்லக்கூடிய விஷயம்
1) சிங்கிள் பேஷ் AC supply என்றால் 230 voltage (வோடேஜ் ) என்று அர்த்தம்
2) த்ரீ பேஷ் AC supply என்றால் 440 voltage (வோடேஜ் ) என்று அர்த்தம்
நாம் விவசாயத்திற்கு பயன்படுத்தும் மொடோர்கள் மற்றும் பெரும் தொழிற்ச்சாலைகள் ஆகிய இடங்களிலும் வீட்டிற்கு அதிகமான load தேவைப்படும் போதும் த்ரீ பேஷ் AC supply பயன்படுகிறது.
நமது வீடுகளில் நாம் பெரும்பாலும் பயன்படுத்துவது சிங்கிள் பேஷ் AC supply

ஆகும் .
DC supplay யை பொறுத்தவரையில் இதன் voltage (வோடேஜ் ) அளவு 440v

இந்த supplay தொழிற்ச்சாலைகளில் தான் பயன்படும்.

THREE PASHE AC supply
______________________________ ரெட் (சிவப்பு )

P_____________________________ பாசிடிவ்
230 V
N_____________________________ நெகடிவ்
DC supply
P______________________________
440 V
N______________________________
AC ---- ALTERNATING CURRENT (or) time invariant supply
DC----- DIRECT CURRENT (or) time variant supply


420 V
Y______________________________எல்லோ(மஞ்சள் )
420 V
B_______________________________ப்ளூ (ஊதா )
SINGLE PASHE AC supply

எப்படி AC supply இருக்கிறதோ அதேபோல் DC supplsy என்ற ஒன்று இருக்கிறது.

1]நீர்மின்நிலையம்


இந்தப் படத்தில் இருப்பது தான் நீர்மின்நிலையம் ஆகும். சரி இனி இதைப் பற்றிப் பார்ப்போம் படத்தில் உள்ளது போல ஒரு பெரிய அருவிக்கு அருகில் இந்த நிலையத்தை நிறுவி மின்னாற்றல் பெறப்படுகிறது.

இதில்  உள்ள டாம் ஆனது நீரை சேமிக்கப் பயன்படுகிறது.

ரிசர்வாயர் ஆனது நீரின் அளவை  நிர்ணயம் செய்கிறது.

இந்த ரிசர்வயரில் இருந்து அதிக அழுத்தத்துடன் நீரானது பென்ச்டோக் என்ற அமைப்பின் வழியாக செல்கிறது.

இந்த அதிக அழுத்தத்தை பொடென்ஷியல் எனெர்ஜி என்று கூருவார்கள் இந்த எனெர்ஜியானது பென்ச்டோக் அமைப்பில் ஹைனடிக் எனேர்ஜியாக மாறி டர்பைனை அடைகிறது.
இதில் டர்பைன் என்பது நம் வீடுகளில் இருக்கும் டேபிள் பேனில் உள்ள சிறகுகளை போன்ற அமைப்புடையது இது மின்னாக்கி என்று சொள்ளக்குடிய ஜெநேரட்டோர் என்ற அமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த மினாக்கியானது மெக்கானிக்கல் எனெர்ஜியை மின்னாற்றலாக மாற்றக்குடிய அமைப்பு ஆகும்.

[1]என் சிந்தனைக்கு எட்டிய வயரிங் பற்றிய தகவல்:


பெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது.

அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க் செய்யும் முறையில் நான் சொல்வதையும் சேர்த்தால் வேலை நன்றாக இருக்கும். 

அதாவது வீட்டு  சுவரின் உள்ளாகவோ அல்லது சுவரின் வெளியாகவோ தான் நாம் வயரின் செய்வோம். 

பிறகு ஏதாவது சிறிய தவறு ஏற்பட்டால் அதாவது வயர்கநேக்சனில் பழுது ஏற்பட்டால் அதை கண்டுபிடிப்பது என்பது ஓரளவிற்கு கடினமான விஷயம்.

GATE EXAM SYLLABUS


Electrical Engineering - EE
ENGINEERING MATHEMATICS

Linear Algebra: Matrix Algebra, Systems of linear equations, Eigen values and eigen vectors.

Calculus: Mean value theorems, Theorems of integral calculus, Evaluation of definite and improper integrals, Partial Derivatives, Maxima and minima, Multiple integrals, Fourier series. Vector identities, Directional derivatives, Line, Surface and Volume integrals, Stokes, Gauss and Greens theorems.

16] மின்தடை [resistance ]


ஒரு கடத்தியின் வழியே மின்சாரம் பாயும் பொழுது, அக்கடத்தி தன்னுள் நிகழும்
மின் அணு ஓட்டத்திற்கு ஒரு வித தடையைக் கொடுக்கிறது. இந்த எதிர்ப்பாகிய தடையையே மின்தடை என்கிறோம்.
மின்தடையின் அலகு ' ஓம் ' ஆகும். மின் இயலில் மிகவும் முக்கியமான, அடிப்படை விதியான ஓம் விதியை நமக்கு அளித்த ஓம் என்ற ஜெர்மணிய விஞ்ஞானியின் நினைவாக மின் தடையின் அலகை ஓம் என்று அழைக்கிறோம். மின்தடையை அடையாளமிட ' R ' என்னும் எழுத்தை உபயோகிக்கிறோம்.


ஓம் :

ஓம் என்பதை, ஒரு வோல்ட் மின் அழுத்தமுள்ள ஒரு கடத்தியின் இரு முனைகளுக்கு இடையில் ஒரு ஆம்பியர் மின் ஓட்டம் செல்லும் பொழுது ஏற்படுகின்ற தடையே ஒரு ஓம் ஆகும்.

15] மின் அழுத்த வேறுபாடு[potential difference ]


ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு ஒரு கூலும் நேர் மின் உட்டத்தை நகர்த்தி செல்ல செய்யப்படும் வேலையே மின் அழுத்த வேறுபட்டு ஆகும்.
மின் அழுத்த வேறுபாட்டை அளக்க பயன்படும் அலகு வோல்ட் ஆகும். இத்தாலிய விஞ்ஞானியான வோல்டாவின் நினைவாலே இதன் அலகு வோல்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

வோல்ட் :

ஒரு ஓம் மின்தடையுள்ள கடத்தியில் ஒரு ஆம்பியர் மின்னோட்டம் பாய்வதற்கு நிறுவப்படும் மின் அழுத்த வேறுபாடு ஒரு வோல்ட் ஆகும். வோலடை அடையாளமிட ' V ' என்ற எழுத்தை உபயோகிக்கிறோம்.

14] மின்னோட்டம்[current]மின் ஊட்டம் இடம் பெயர்வதையே மின்னோட்டம் என்று சொல்லுகிறோம். ஓரழகு நேரத்தில் ஒரு புள்ளியை கடந்து செல்லும் மின் ஊட்டத்தின் அளவையே மின் ஓட்டத்தின் வலிமை ஆகும். கடத்தியில் நிகழும் மின் ஓட்டம், அதன் முனைகளுக்கிடையே ஏற்படும் மின் அழுத்த பேதத்தையும் பொறுத்தது.

இம் மின்னோட்டத்தி அளக்கப் பயன்படும் அலகு ஆம்பியர் ஆகும். மின்னோட்டங்களுக்கு இடையேயுள்ள காந்த விசைகளுக்கான விதிகளை முதன் முதலில் கண்டறிந்த விஞ்ஞானியான ஆம்பியரின் நினைவாகவே, மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆம்பியர்:

ஒரு வோல்ட் மின் அழுத்தமுள்ள கடத்தியின் இரு முனைகளுக்கு இடையில் ஒரு ஓம் மின்தடை இருக்குமானால் அதில் பாயும் மின்னோட்டத்தின் அளவு ஒரு ஆம்பியர் ஆகும். ஆம்பியரை அடையாளமிட 'A ' என்னும் எழுத்தை உபயோகிக்கிறோம்.

13] மின்காப்புப் பொருள்கள்[insulators ]தன் வழியே மின் ஓட்டம் செல்வதை அனுமதிக்காத பொருள்கள் மின்காப்புப் பொருள்கள் எனப்படும்.

[உதாரணம்] காகிதம் , கண்ணாடி , ரப்பர் , மைக்கா , எபனைட் , மரம் , பிளாஸ்டிக் , போர்சிலின்.

12] மின் கடத்திகள்[conductors ]தன் வழியே மின் ஓட்டம் ஓடுவதற்கு அனுமதிக்கும் பொருள்கள் மின் கடத்திகள் எனப்படும்.
[உதாரணம்] தங்கம் , வெள்ளி , பித்தளை , செம்பு , அலுமினியம்.

இவை அனைத்தும் மின்சாரத்தை தன்னகத்தே எளிதில் கடத்துகின்றன. இவைகளில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்த உலோகங்கள் ஆகும். சாதரணமாக நாம் செம்பைத் [copper ] தான் அதிக அளவி கடத்திகளாக பயன்படுத்துகிறோம். தற்சமையம் செம்பு கிடைப்பது சற்று அரிதாக இருப்பதால் அலுமினியக் கடத்திகள் உபயோகத்திற்கு அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன.

11]இயங்கு மின் இயல்ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு, மின் கடத்திகளின் மூலம் இயங்கு இயங்கு மின்னியலைக் கொண்டு செல்லாம். மின் கடத்தி ஒன்றில் மின்னோட்டம் நிகழ்கிறது என்றால் உண்மையில் அது மின் அணுக்களின் ஓட்டமே ஆகும். உயர் மட்டத் தொட்டியில் இருக்கும் தண்ணீர் குழாய் வழியாக கீழ்மட்டத் தொட்டிக்குப் பாய்வது போன்றே மின்சாரமும் உயார் அழுத்தமுள்ள ஒரு முனையிலிருந்து, தாழ்ந்த அழுத்தமுள்ள மற்றொரு முனைக்கு பாய்கிறது. இந்த மின் அணுக்களின் ஓட்டத்தையே மின்னோட்டம் என்கிறோம். இதனையே நாம் இயங்கு மின் இயல் என்கிறோம்.10] நிலை மின்னியல்நிலை மின்னியலில் மின் இயல் ஒரு இடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு பாயாமல், நிலையாக ஒரே இடத்தில் இருக்கிறது. இது போன்ற  நிலையான மின் இயல், இரு பொருள்ளிடையே ஏற்படும் உராய்வினால் உண்டாகிறது என்பதை சற்று முன்னர் அறிந்தோம்.

9] நேர் மின் ஓட்ட அமைப்பு [DC circuits ]


ஆதார விவரங்கள் [Basic concepts ]
மின்சாரம் என்பது ஒரு வகையான சக்தி.மின்சாரத்தை கண்ணால் காண இயலாது.ஆனால் அதனுடைய பல்வேறு செயல்களில் இருந்து உணர முடியும்.பொதுவாக சக்தியை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.ஒரு சக்தியை மற்றொரு சக்தியாக மாற்ற முடியும். இதன் அடிப்படையில் மின்சக்தியானது,நமக்கு இயந்திர சக்தி, வெப்ப சக்தி, மற்றும் இராசாயன சக்தி,அணு சக்திகளில் இருந்து கிடைக்கிறது. இதே போல் மின்சக்தியையும் நாம் இயந்திர சக்தியா ,ஒலி சக்திய,ஒளி சக்தியாக,வெப்ப சக்தியாக,இராசாயன சக்தியாக மாற்றலாம்.

ஏறத்தாள கி.மு. 600 -க்கு முன்னமேயே, கிரேக்கர்கள் ஆம்பர் என்னும் ஒரு வகை பழுப்பு நிற இருக்கியா கோந்தை, ஒரு சிறிய பட்டுத் துண்டிலோ, அல்லது கம்பளி துண்டிலோ தேய்த்தால் அது காகிதம்,வைக்கோல்,துரும்பு போன்ற இலேசான பொருள்களை ஈர்ப்பதை கண்டறிந்தனர்.


8]springer இணையத்தளம்


தொழில் நுட்ப செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டுமா :
முதலில் http://www.springer.com/?SGWID=9-102-0-0-௦ இந்த இணையதளத்திற்கு  செல்லுங்கள் பிறகு உங்களுக்கு தேவையான கேள்விகளை அந்தந்த துறை சார்ந்த ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த இணையதளத்தில் எப்படி கேவிகளை  ஆசிரியரிடம் கேட்பது என்பதைப் பார்ப்போம்:
 இது தான் இணையதளத்தின் முதல் பக்கம்.
 இதில் நாம் எந்த துறையில் கேள்வி கேட்க வேண்டுமோ அந்த துறையை தேர்வு செய்ய வேண்டும்.

படத்தில் உள்ளபடி தேர்வு செய்க...
ஏதாவது ஒரு ஆசிரியரைத் தேர்வு செய்து கேள்வியை தொடங்கலாம்.

நாம் ஆசிரியரை தேர்வு செய்த பிறகு திரையில் உள்ளபடி தோன்றும்.
பின்பு நாம் கேள்விகளை சரமாரியாக இவர்களிடம் கேட்கலாம். அவர்களிடம் நம் மின்னஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டும். அவர்கள் பதிலை மின்னஞ்சலுக்கு அனுப்புவார்கள்.

7] அணு மின் நிலையம்அணு மின் நிலையம்:
அணு உலைகளில் உண்டாகும் வெப்பத்தை உபயோகித்து, நீரை ஆவியாக்கி, நீராவி விசையாழியில் செலுத்தி சுழல்ச் செய்து இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் மின்னாக்கியிலிருந்து மின்சாரத்தைப் பெறுகிறோம். இது போன்ற அணு மின் நிலையம் தமிழ் நாட்டில் சென்னைக்கு அருகில் உள்ள கல்பாக்கத்தில் உறுவாக்கப்பட்டிருக்கிறது.

6] அனல் மின் ஆக்கம்


அனல் மின் ஆக்கம்:
நீர் இல்லாத இடங்களில் நிலக்கரி, மண்ணெண்ணெய், எரிவாயு போன்ற பொருள்களை உபயோகித்து நீரை சூடாக்கி, நீராவி உண்டுபண்ணி, அதை நீராவி விசையாழியில் (steam turbine) செலுத்தி சுழலச் செய்து, இதனுடன் இனைக்கப்பட்டிருக்கும் மின்னாக்கியில் இருந்து மின்சாரத்தைப் பெறுகிறோம். இது போன்ற அனல் மின் நிலையங்கல் தமிழ் நாட்டில் தூத்துக்குடி, பேசின் ப்ரிட்ஜ், எண்ணூர், நெய்வேலி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

5] நீர் மின் ஆக்கம்நீர் மின் ஆக்கம்:நீர்வீழ்ச்சிகளிலிருந்து வரும் நீரையும் அனைகளில் இருந்து வரும் நீரையும் பெரிய விட்டமுள்ள குழாய்களின் மூலம் கொணர்ந்து நீர்விசையாளிகளில் (turbines) செலுத்தி, சுழலச் செய்து இதனோடு பொருத்தியிருக்கும் மின்னாக்கியிலிருந்து மின்சாரத்தைப் பெருகிறோம். இது போன்ற நீர் மின்னாக்கிகள், நமது தமிழ் நாட்டில் மேட்டூர், குந்தா, சுருளியாறு,பைக்காரா, போன்ற இடங்களில் இருந்து பயன்படுத்துகின்றனர்.

4] மின் இயல் துரையின் அறிமுகம்


இன்றைக்கு பொறியியல் துறைகளிலே, மிகவும் முக்கியம் வாய்ந்தாது மின் இயலே, மின்சாரத்தை மனித சமுதாயத்தின் ஊழியன் என்று கூரினால் அது மிகையாகது. வாழ்க்கையை சகல வசதிகலுடனும், நிரைந்த இன்பத்துடனும் அனுபவிக்க மின் இயலின் உதவி மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். மிசாரத்தை ஆடம்பரப் பொருள் என்று ஒதுக்க இயலாத அளவுக்கு அன்றாட வாழ்க்கையில் நம்முடன் அது இரண்டரக் கலந்துவிட்டது. ஒரு நாட்டின் வளர்ச்சியை அளவிட, அந்நாட்டின் மின்சார வளர்ச்சியையே அளவுகோலாக உபயோகப்படுத்துகின்றனர். மின்சார வளர்ச்சி முதிர்வு பெற்ற நாடுகளில் அந்த மக்களின் வாழக்கைத்தரம், பொருளாதார நிலமை முதலியன நன்கு முன்னேற்றம் அடைந்திருக்கும்.
நவீன துழிற்சாலை ஒன்றினுல் நுழைவோமேயானால், சிரிய இழை விளக்கிலிருந்து, பல நூறு டன் எடைகளைத் தூக்கும் பாரம் தூக்கிகள்(crane) வரை மின்சாரத்தால் தான் இயங்குகின்றன.ஒரு தனி மனிதனின் அன்றாட வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், அவனது வீட்டில் தண்ணீர் சுடவைக்கும் இயந்திரத்திலிருந்து, பொழுதுபோக்க உபயோகப்படுத்தும் வானொலி, தொலைக்காச்சிப் பெட்டி வரையில் அவனுக்கு மின்சாரம் உதவுகிரது.
இது தவிர, கால்நடைத்துறை, விவசாயத் துறை மற்றும் செய்தி ஒலிபரப்புத் துறை, வானிலை முன் அறிவிப்பு ஆகியயாவிலும் முதன்மை தான்ங்கி நிற்கிறது.
இத்தகைய மின்சாரம் தற்பொழுது மூன்று முறைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது:
1) நீர் மின் ஆக்கம் (hydro electric system)
2) அனல் மின் ஆக்கம் (thermal electric system)
3) அணு மின் ஆக்கம் (atomic electric system)

3] 3-ponit plugகைப் பற்றிய தொகுப்பு
பொதுவாக இந்த 3-point plugகுகள்  கிரைண்டர் , மிக்சி , fan, மற்றும் bridge போன்றவைகளில் பயன் படுகிறது.
இந்த 3-point plugல் உள்ள மூன்றாவது பின் பட்டும் பெரியதாக இருக்கும். ஏன் என்றால் நாம் பயன்படுத்தக்குடிய உபகரணத்தில் ஏதாவது சார்ட் சர்க்கியுட் ஏற்ப்பட்டால் அந்த சார்ட் சர்க்க்யுட் கரண்டானது இந்த பின் வழியாக சென்று எர்த் ஆகி விடுகிறது.
எர்த் என்பது மனிதனுக்குப் பாதுகாப்பானதா இல்லை மெசின்களுக்குப்  பாதுகாப்பானதா. கண்டிப்பாக அது மெசின்களுக்குத்தான் பாதுகாப்பானது.
உதாரணத்திற்கு எர்த் இணைப்பு செய்துள்ள மேசிணறி பாகத்தை தொட்ட உடன் நமக்கு ஷாக் அடிக்கும்.
எர்த் இணைப்பு செய்யா விட்டால் ஷாக் அடிக்காது. உதாரணம் ஊர்களில் திருவிழா நேரங்களில் லைட் செட்டிங் போடுபவர்கள் லைட்டை வரிசையாக [series] இணைக்கும் போது அவர்கள் கைகளால் குண்டு ஊசியை வைத்து வயரில் குத்தி வரிசையாக இணைப்பு கொடுப்பார்கள்.

2] வயரில் கரண்ட் செல்லும் முறைகளைப் பற்றியா தொகுப்பு


  •  stantard wire gage[ SWG ]
  • இதை சுருக்கமாக கேஜ் என்று கூரலாம்.
  • இந்த கேஜ் எண் அதிகமாக ஆக வயரின் விட்டம் குறைந்து கொண்டே போகும்.
எடுத்துக்காட்டு:
கேஜ் எண்                           விட்டம் 
14                                        2.03
15-19                                  1.somthing
20-42                                  0.somthing
43-ect..                                0.0somthing
தேவையான கேஜ் எண்                 சமமான கேஜ் எண் 
10                                                  13 கேஜ் வயர் இரண்டு 
12                                                  15 கேஜ் வயர் இரண்டு 
14                                                   17 கேஜ் வயர் இரண்டு 
17                                                  20 கேஜ் வயர் இரண்டு 
-------------------------------------------------------------------
22 கேஜ் வயர் இரண்டு                  19 கேஜ் வயர்  ஓன்று
25 கேஜ் வயர் இரண்டு                   22 கேஜ் வயர் ஓன்று
27 கேஜ் வயர் இரண்டு                   24 கேஜ் வயர் ஓன்று
28 கேஜ் வயர் இரண்டு                   25 கேஜ் வயர் ஓன்று

1] உங்களுக்குத் தெரியுமா?


காற்றாலைகளை நிறுவுகிறது பாரத் ஸ்டேட் வங்கி (SBI).
நாட்டில் முதல் முறையாக பொதுத் துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி சொந்தப் பயன்பாட்டிற்காக தமிழகம் , ஜதராபாத் , மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காற்றாலைகளை நிறுவுகிறது. தமிழகம் , மகராஷ்டிரா , குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள கிளைகளுக்கான மின்சாரத்தை தயாரிக்கும்  நோக்கில் இம்மூன்று மாநிலங்களிலும் காற்றாலைகளை நிறுவ SBI திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் கோயம்பத்தூரில் சமீபத்தில் காற்றாலைகளை இவ்வங்கி நிறுவியது. மற்ற மாநிலங்களில் இன்னும் நான்கு மாதங்களில் இத்திட்டம் துவக்கப்பட்டுவிடும்.

4] எப்படி நம் வீட்டிற்கு 3பேஸ், சிங்கில்பேஸ் supply வருகின்ரது.( பாகம்-2)
பொதுவாக நம் ஊர்களுக்கு அருகாமையில் அல்லது நம் ஊர் எல்லையில் இருக்கும் transformer-கள் தான் distribution transformer ஆகும். இதற்கு sub-station-ல் இருந்து மூன்று வயர்கள் எடுக்கப்பட்டு இந்த distribution transformer-ன் input-டாக கொடுக்கப்பட்டு output-ல் 4வயர்கள் எடுக்கப்படும்.

Distribution transformer-ல் connection-கள் இரண்டு முரையாக பிரிக்கப்பட்டுள்ளது. அது delta மற்றும் star ஆகும்.

Sub-station-ல் இருந்து வரக்கூடிய மூன்று வயர்கள் distribution transformer-ல் உள்ள delta-வில் இனைக்கப்பட்டு அடுத்து star connection-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த transformer-லேயே earth ஆனது இணைக்கப்பட்டு விடும். இதை சேர்த்துதான் distribution transformer-ன் output-ல் நான்கு வயர்கள் எடுக்கப்படுகின்றன.

3] எப்படி நம் வீட்டிற்கு 3பேஸ், சிங்கில்பேஸ் supply வருகின்ரது.(பாகம்-1)


Electrical supply ஆனது வீடு மற்றும் ஒரு சிறிய தொழிற்சாலை ஆகியவற்றிற்கு செல்லும் போது 3பேஸ் 4வயர் சிஸ்டம் அல்லது சிங்கில் பேஸ் 2வயர் சிஸ்டமாக செல்கிறது.

3பேஸ் 4வயர் சிஸ்டத்தில் 400v to 415v வரையிலும் சிங்கில் பேஸ் 2வயர் சிஸ்டத்தில் 230v வரையிலும் செல்லும்.

பொதுவாக ஒரு ஏரியாவிற்கு suply அனுப்ப வேண்டும் என்றால் அதற்கு அருகில் distribution sub-station கண்டிப்பாக அமைந்திருக்கும்.[இங்குதான் நாம் போய் மின்சாரக் கட்டனம் செலுத்துவோம்(EB-office)].

ஒரு வீட்டில் அதிகமான பவரை பயன்படுத்தினால் அதாவது மோட்டார்,AC போன்ற அதிக பவரை எடுக்கும் சாதனங்களை பயன்படுத்துவதால் அவர்களுக்கு 3பேஸ் supply தேவைப்படுகின்றது.[400v to 415v].

2] POWER SUPPLY NETWORK
பொதுவாக மின்சக்தியானது hydroelectric,thermal,and nuclear power station இவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிரது.

இந்த station முக்கியமாக load centre-க்கு அருகாமையில் இருக்கும்[load centre என்றால் தயாரிக்கப்பட்ட மின்சக்தியை பராமரிக்கும் இடம் ஆகும்].

இவ்வாறு தாயாரிக்கப்படும் [generated] மின்சக்தியை [electrical energy] பிரித்தெடுத்து consumer-களுக்கு கொடுப்பதற்காக. இதில் extensive power supply network என்பது மிகவும் அவசியம் என்றாகிறது.

1] ஜிபிஎஸ் எப்படி இயங்குகிறது?


நான் இதை ஒரு புத்தகத்திலிருந்து படித்தேன் நூலாசிரியர் சு.வேங்கடாசலம், மும்பை
 அவருக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

  Global positioning system என்பதன் சுருக்கமான பெயர்தான் GPS. இதில் 24 செயர்க்கைக்கோள்கள் பங்கு எடுத்துகொள்கின்றன இவை அமெரிக்க மிலிட்டரி அப்ளிகேசன்களுக்காக அவர்களுடைய U.S.Department of defence மூலமாக ஆகாயத்தில் விடப்பட்டன. 1980களில் இந்த ஜிபிஎஸ் சிஸ்டம் மற்ற மக்களுக்காகப் பயன்பட அளிக்கப்பட்டது.

ஜிபிஎஸ் செயர்க்கைக்கோள்கள் பூமியை ஒரு நாளில் இரண்டு முறை வலம் வருகின்றன. அவை தங்களுடைய தற்போதைய இடத்தை எல்லா வேளையிலும் சிக்னல்கள் மூலமாக அனுப்பிக்கொண்டிருக்கும். ஜிபிஎஸ் ரிசிவர்கள் இந்தத் தகவல்களை பெற்றுக்கொள்ளும். பிறகு சிக்னல்கள் எந்த நேரத்தில் trasmit செய்யப்பட்டன ,எந்த நேரத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டன ஒத்துப்பார்க்கும்.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.