மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

வீட்டு ஒயரிங் தொடர் - 1 (House wiring part - 1)

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவு அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு. அப்படியே புன்னகையோடு பதிவுக்கு செல்லும் முன் சிறிய விளக்கம்:

நண்பர்களே நான் இதுவரையில் எழுதிய பதிவுகள் அனைத்தும் நான் பார்த்து புரிந்து கொண்ட மற்றும் என்னுடைய அனுபவத்தை வைத்து எழுதியவைகள் என்பதை தெரிவித்து அந்த வரிசையில் இந்த தொடர் பதிவையும் எழுதுகிறேன். இது ஒரு எலெக்ட்ரிகள் ஒயரிங் தொடர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த தொடர் அனைத்தையும் படித்து முடித்தவுடன் நாமாகவே ஒயரிங் இனைப்புகளை நம்முடைய வீடுகளில் கொடுக்க முடியும் என்பதை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 

இனி பதிவிற்கு செல்வோம்:


ஒயரிங் செய்வதற்கு 1/8", 2/18", 3/18" மற்றும் 1/20", 3/20" என்று பல வகையான ஒயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 
அதாவது,

1/18" இதில் 18 என்ற எண் ஆனது ஒயரின் உள்ளாக இருக்கக்கூடிய மின்சாரம் செல்லும் கம்பியின் பருமன் ஆகும். மேலும் கேஜ் என்பார்கள் (18 கேஜ் என்று சொல்வார்கள் ).
1 என்ற எண் ஆனது 18 கேஜ் பருமன் உள்ள மின்சாரம் கடத்தும் ஒரு கம்பி மட்டும் ஒயரின் உள்ளாக  இருக்கிறது என்பதை குறிக்கிறது.

இதே போன்று தான்  2/18", 3/18", 1/20", 3/20" எல்லாமே ஆகும். 

3/20" என்பது மேலே சொன்னதைப் போன்றே  20 கேஜ் பருமன் உள்ள மின்சாரம் கடத்தும் மூன்று கம்பி மட்டும் ஒயரின் உள்ளாக  இருக்கிறது என்று அர்த்தம் ஆகும். 

நாம் மின்சாரம் கடத்தும் கம்பியை கையால் தொட்டால் உயிருக்கு ஆபத்து ஏர்படும்   என்வே தான் ஒயர் என்ற இன்சுலேசன் அமைப்பிற்கு உள்ளாக கம்பி இருப்பது போல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 

சரி அது என்ன இன்சுலேசன் என்ற கேள்வி எழுகிறதா இதோ பதில்:



நாம் மின்சாரத்தை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இன்சுலேட்டர் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் மின் கடத்தா பொருள்கள் அனைத்தும் இன்சுலேட்டர்கள் என்று சொல்லலாம்.

உதாரணமாக:

கண்ணாடி, பிளாஸ்டிக்குகள், பேப்பர், பீங்கான், நன்றாக காய்ந்த மரக்கட்டை, ரப்பர் வகை மற்றும் காட்டன்கள். இவை அனைத்திலும் மின்சாரம் பாயாது. இதையே நாம் இன்சுலேசன் என்று சொல்கிறோம்.

சரி இனி விட்டதிலிருந்து தொடருவொம்,

 

இப்படி 1, 2, 3..... என்று கம்பிகள் இல்லாமல் அதற்கு பதிலாக அதிகமான பல சிறு சிறு கம்பிகள் உள்ள ஒயர்களும் இருக்கிறது. இதனை மல்டிபிளக்ஸ் ஒயர் என்று கூறவேண்டும்.

அதிக பருமன் உள்ள ஒயர்களை வாங்கும் போது sq.mm (ஸ்கொயர் எம் எம்) என்று சொல்லித் தான் வாங்க வேண்டும். 

உதாரணமாக:

16 sq.mm, 18 sq.mm, 20 sq.mm கொடுங்கள் சார் என்று கேட்டு வாங்க வேண்டும். 

மின்சாரத்தின் அளவைப் பொருத்தும், பயன்படுத்தும் மின் சாதனத்தின் மின்சார அளவைப் பொருத்து மட்டும் தான் நாம் ஒயரை வாங்க வேண்டும். 

கவணிக்க வேண்டியது:

கம்பியின் கேஜ் அதிகமாக இருந்தால் கம்பியின் பருமன்  சிறியதாக இருக்கிறது என்று அர்த்தம். கம்பியின் கேஜ் குறைவாக இருந்தால் கம்பியின் பருமன்  பெரியதாக இருக்கிறது என்று அர்த்தம். 

கம்பியின் பருமன் பெரியதாக இருந்தால் அதிக அளவு மின்சாரம் குறைந்த வேகத்தில் பாயும். கம்பியின் பருமன் சிறியதாக இருந்தால் குறைந்த அளவு மின்சாரம் அதிக வேகத்தில் பாயும். 

(தோட்டங்களில் பயன்படுத்தும் மோட்டார் பைப்புகளை நினைத்துப் பார்த்தல் தெளிவாகப் புரியும். பைப்பின் அளவு சிறியதாக இருந்தால் குறைந்த அளவு தண்ணீர் வேகமாக வரும். பைப்பின் அளவு பெரியதாக இருந்தால் தண்ணீர் அதிக அளவு தண்ணீர் குறைந்த வேகத்தில் வரும்.)

கம்பியின் பருமன் அதிகமாக இருந்தால் (கேஜ் எண் குறைவு) மின்தடை (resistance) குறைவாக இருக்கும் அப்படி என்றால் கரண்ட் ஆனது அதிகமாக செல்லும்.

கம்பியின் பாருமன் குறைவாக இருந்தால் (கேஜ் எண் அதிகம்) மின்தடை (resistance) கொஞ்சம் அதிகமாக இருக்கும். அப்படி என்றால் கரண்ட் ஆனது குறைவாகச் செல்லும்.

தொடரும்....
தகவல்: 

மின்சாரம் என்றால் என்ன ?

இதை நான் பல பதிவுகளில் சொல்லி இருக்கிறேன் . இருந்தாலும் படிப்பதை பல முறை படித்தால் தான் அது நம்முடைய மூளையில் நன்றாக பதியும் என்பதை கருத்தில் கொண்டு மீண்டும் எழுதுகிறேன். 

நாம் பார்க்கும் அனைத்துப் பொருள்களுமே பல அணுக்களின் கூட்டுக் கலவை ஆகும். இங்கு அணுக்கள் என்பது மிகவும் முக்கியமானது. இந்த அணுவின் உள்பகுதியில் எலெக்ட்ரான், புரோட்டான் சம எண்ணிக்கையில் இருக்கின்றன. இந்த எலெக்ட்ரான், புரோட்டான்களுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும் போது அது நகர்ந்து ஓடும். இந்த எலெக்ட்ரான், புரோட்டான்களின் ஓட்டமே மின்சாரம் ஆகும். 

மின்சாரம் பாயக்கூடிய பொருட்கள்:

செம்பு கம்பி (காப்பர்)


அலுமினியம்


தங்கம் (அதிக அளவில் பாயும்)

    

இரும்பு


சிலிக்கான் (சிறப்பாக பாயும்)


வெள்ளி 


யுரேனியம், பிளாட்டினம், ரேடியம் மற்றும் ஹைட்ரஜன் (காற்று). இவை அனைத்தும் மின்சாரத்தை கடத்தும். 

இவற்றில் துருப்பிடிக்காமலும் விலை மலிவாகவும் கிடைப்பது செம்பு கம்பியும் (காப்பர்), அலுமினியமும் தான் எனவே தான் அதனையே நாம் பயன்படுத்துகிறோம்.

இந்த மின்சாரத்தில் இருவகை உண்டு:

AC மின்சாரம், DC மின்சாரம் எனப்படும். இதைப்பற்றி வரவிறுக்கும் பதிவுகளில் பார்ப்போம். 

மின்சாரத்தின் வேகம்:


மின்சாரத்தின் வேகம் ஒரு நொடிக்கு மூன்று இலட்ச்சம் கி.மீ வேகத்தில் செல்லும் என்று கணித்திருக்கிறார்கள். அதாவது பல அணுக்களால் ஆன காப்பர் மற்றும் அலுமினியக் கம்பிகளில் இருக்கக்கூடிய எலெக்ட்ரான், புரோட்டான்கள் நொடிக்கு  மூன்று இலட்ச்சம் கிலோமீட்டர் (Km) வேகத்தில் ஓடும் என்று அர்த்தம்.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.