மின்தடை
(resistor) அளவில்
மிகச்சிறியதாக இருப்பதால்
இது மின்னோட்டத்திற்கு தரும்
தடை மதிப்பு மற்றும் tolerance
ஆகியவற்றை
நேரடியாக எழுதாமல் கலர்
வளையங்களில் (color band) மூலம்
காட்டப்பட்டிருக்கும்.
இதில்
மொத்தம் நான்கு color band
கள் உள்ளன.
1 Band ஆனது
மின்தடையின் முதல் இலக்க
மதிப்பையும்.
2 Band ஆனது
மின்தடையின் இரண்டாம் இலக்க
மதிப்பையும்.
3 Band ஆனது
multiplier எனப்படும்.
இது மேற்கூறிய Band 1 மற்றும் Band 2 தரும்
மின்தடையின் இலக்க மதிப்புடன்
எத்தனை எண்ணிக்கையை உடைய
zero சேர்க்க
வேண்டும் என்பதை தெரிவிக்கிறது.
4 Band ஆனது
மின்தடையின் tolerance எவ்வள்ளவு
என்பதைக் காட்டுகிறது.
1 Band 2 Band 3 Band 4 Band
Yellow violet Red Silver
|| || || ||
4 7 2 10%
*10^2=100
(Redன்மதிப்பு
2
ஆதலால்
2 zero சேர்க்க
வேண்டும்.)
எனவே
இப்பொழுது மின்தடையின்
மதிப்பு = 47*100 = 4700ஓம்
= 4700 ohm
or 4.7 kilo ohm ஆகும்.
(1000 ஓம் என்பது
1கிலோ
ஓம் ஆகும். எனவே
ஓமை 1000தால்
வகுத்தால் கிலோஓம் கிடைக்கும்.)
10% tolerance என்பது
4700*10/100 = 470 ஓம்
ஆகும்.
எனவே
மின்தடையின் actual மதிப்பு
4700+470 = 5170 ஓம்
க்கும் ( 5.17 kilo ohm)
4700-470 = 4230 ஓம்
க்கும் (4.23 கிலோஓம்
) இடையில்
இருக்கலாம் என்று பொருள்.