மின்மாற்றி என்பது மின்னியல் துறையில் மிகவும் இன்றியமையாத உபகரணம் ஆகும். இதன் வடிவமானது மிகவும் எளிமையானது. ஆகவே இதை வடிவமைப்பதும் எளிது. மேலும் இதில் எந்தவிதமான சுழலும் பகுதிகளும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
இந்த மின்மாற்றியானது Power System, Power Transmission மற்றும் Distribution ஆகிய இடங்களில் மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது.
இது உயர் மின்னழுத்தத்தை குறைந்த மின்னழுத்தமாக மாற்றுவதற்கும், மேலும் தேவைப்படும் இடங்களுக்கு தேவையான மின்னழுத்தத்தை குறைத்து மற்றும் அதிகரித்து கொடுப்பதற்கு பயன்படுகிறது. (Step Down and Step Up)
மின்மாற்றி (Transformer)
இதில் Primary Coil மற்றும் Secondary Coil என்ற இரண்டு அமைப்புகள் இருக்கும். இந்த இரண்டு விதமான Coil களுமே Core என்ற அமைப்பில் சுற்றப்பட்டு இருக்கும்.
இதில் Primary coil க்கு AC மின்னழுத்தம் கொடுக்கும் போது core என்ற அமைப்பில் மின்காந்த புலம் ஏற்பட்டு core முழுவதும் பரவத் தொடங்குகிறது.
மேலும் Secondary coil -ல் அந்த மின்காந்த புலம் சென்றதும் secondary coil ஆனது core -ல் சுற்றப்பட்டுள்ள சுற்றுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மின்னழுத்தமானது வெளியில் கிடைக்கிறது.
கவனிக்க:
அதிக சுற்றுகள் இருந்தால் அதிகமான மின்னழுத்தமும் குறைந்த சுற்றுகள் இருந்தால் குறைவான மின்னழுத்தமும் கிடைக்கும்.
இந்த மின்மாற்றியானது Faraday என்ற அறிஞரின் மினகாந்த தூண்டல் தத்துவத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது.
இந்த Primary coil -லிருந்து Secondary coil -க்கு core -ன் வழியாக மின்காந்த புலம் சென்று secondary coil -ல் மின்சாரம் (Induced emf) கிடைக்கிறது. இதைத்தான் Mutual Induction Principle என்று கூறுகிறோம்.