ஒவ்வொரு தொழிற்சாலையிலும் அதனுடைய பராமரிப்புக்கு என்றே தனியாக ஒரு பராமரிப்பு பொறியாளர் (Maintenance Engineer) அமர்த்தப்பட்டிருப்பார்.
அங்கு அவருடைய பனியானது மிகவும் இன்றியமையாதது ஆகும். மேலும் தொழிற்சாலையினுடைய இயக்கத்தை கண்ணும் கருத்துமாக பரமரிப்பதுடன் அங்கே ஏற்படக்கூடிய பழுதுகளையும் உடனடியாக பராமரித்து சரிசெய்து அந்த தொழிற்சாலயின் இயக்கத்தை தொடர்ந்து செயல்படச் செய்வதே அவரின் தலையாய கடைமை ஆகும்.
- தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகறிக்க என்னென்ன வழிகள் என்பதை தேர்ந்தெடுத்தல்.
- தேவையில்லாமல் இயந்திரங்களின் முடக்கத்தை கட்டுப்படுத்தி தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகரித்தல்.
- இயந்திரங்கள் மற்றும் அதனுயைய உதிரிபாகங்களுக்கு தகுந்த அளவில் பராமரிப்பு (Maintenance) கொடுத்து இயந்திரங்களின் ஆயுள் காலத்தை அதிகரித்தல்.
- தொழிற்சாலையில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்காக தேவையான இயந்திரங்களை வடிவமைத்து பராமரிப்பு செய்தல்.
- இயந்திரங்களை பராமரிக்க சரியான பராமரிப்பு அட்டவனையை தயாரித்தல்.
- தொழிற்சாலையின் உயர்மட்ட அதிகரிகளுடன் கலந்து பேசி எதிர்கால பராமரிப்பு திட்டங்களை தீட்டுதல்.