மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

3] SCR TESTER – புதிய முயற்சி

நண்பர்களே நாம் இதுவரை எழுதியதில் இது சற்று மாறுபட்டது. நிறைய நண்பர்களுக்கு ப்ராஜக்ட் செய்யத்தெரியும் அவர்களிடம் மல்டிமீட்டெர், டெஸ்டெர் போன்ற உபகரணங்கள் இருந்தாலும் ஒருசில எலக்ட்ரானிக்ஸ் ப்ராஜக்ட்களுக்கு இது கைகொடுக்கும்.


SCR – silicon controlled rectifier

 இதை செய்வதற்கு 9v பாட்டரி [battery]
R1 - 1k மின்தடை [Resister]
R2 - 220 ohm மின்தடை
D2 - ஒரு LED
SW1 – ஸ்விட்ச் [Switch]
D1 – நீங்கள் பரிசோதனை செய்யக்கூடிய SCR இதன் மதிப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
 இதில் இருக்கும் SW1 ஸிவிட்சை ON செய்த உடனே LED ஆனது ON ஆகும்.
அப்படி ON ஆகவிட்டாலோ அல்லது அதன் வெளிச்சம் குறைவாக இருந்தாலோ SCR ஆனது பாலுதாகிவிட்டது என்று அர்த்தம்.

PCB – Printed circuit board.
ப்ராஜக்ட் செய்யும் நண்பர்கள் இந்த லேஅவுடை [layout] வைத்தே எளிமையாக செய்யலாம்.  
 

 விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்............


பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.