மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

சிங்கிள் பேஸ்பிரிவெண்டர்களால் மோட்டார்களின் பாதுகாப்பு அம்சங்கள்

சிங்கிள் பேசிங்(Single Phasing):
மின் சப்ளை 3 பேஸ்கள் இருந்தால் மட்டும் இயக்கிவிடும். இல்லை என்றால் இயக்காது. ஏதாவது ஒரு பேஸ் இல்லையென்றாலும் மோட்டாரை சிங்கிள் பேஸ்பிரிவெண்டர் நிருத்திவிடும்.

அண்டர் வோல்டேஜ்(Under Voltage):
மின் சப்ளையில் மோட்டாருக்குத் தேவையான வோல்டேஜ் மிகவும் குறையும் போது தானாகவே இந்த சிங்கிள் பேஸ்பிரிவெண்டர் மோட்டாரை நிருத்திவிடும்.

பேஸ் சீக்குவென்ஸ்(Phase Sequence):
மின் சப்ளையில் லைன் கனெக் ஷன் முறையாக இருந்தால் மட்டும் மோட்டாரை சரியான டைரக் ஷனில் சுழற்றிவிடும். கனெக் ஷன் ஆனது ரிவர்ஸில் இருந்தால் மோட்டாரை இந்த சிங்கிள் பேஸ்பிரிவெண்டர் நிருத்திவிடும்.

அன்பாலன்ஸ் சப்ளை(Unbalance Supply):
சிங்கிள் பேஸ்பிரிவெண்டரானது மின் சப்ளையில் மூன்று பேஸ்கள் இருந்தால் மட்டுமே மோட்டாரை இயங்க வைக்கும். மூன்று பேஸ்களுக்கிடையில் ஒன்றுக்கொன்று வோல்டேஜ் வித்தியாசம் அதிகமானால் மோட்டாரை நிருத்திவிடும்.

Single Phase Preventor- ன் அவசியம் மற்றும் மோட்டாரில் ஏற்படும் இரண்டு பழுதுகள்

இதன் அவசியம்:
3 பேஸ் மோட்டார்களை இயக்குவதற்கு எப்படி ஸ்டார்ட்டர் பயன்படுகிறதோ அதே போன்று தான் இந்த சிங்கிள் பேஸ் பிரிவெண்டர் ஒரு அவசியமான எலக்ட்ரானிக் சாதனமாகும்.
சிங்கிள் பேஸிங்(Single Phasing):
மூன்று பேஸ்களில் மோட்டார் இயங்கும் போது எதிர்பாராதவிதமாக ஒரு பேஸ் மட்டும் இல்லை என்றால் மீதி இரண்டு பேஸ்களில் அதிகப்படியான கரண்டை எடுக்கும். அந்த சூழ்நிலையில் மோட்டார் காயிலானது வெந்து போகும். இவ்வாறு 3 பேஸ்களில் ஒன்றை மட்டும் இழந்து மற்ற இரண்டு பேஸ்களில் மோட்டார் ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலை உருவாவதைத்தான் "சிங்கிள் பேசிங்" என்கிறோம்.

மோட்டாரானது இரண்டு விதத்தில் பழுது ஏற்படுகிறது :
1.ஓவர்லோடு.
2.சிங்கிள் பேசிங்.
இந்த பழுதை தவிற்பதற்காகதான் நாம் பெரும்பாலும் மோட்டார்களில் ஸ்டார்டர்களை பயன்படுத்துகிறோம்.

ஓவர்லோடு(Overload):
மோட்டார் பம்பு செட்டில் உண்டாகும் மெக்கானிக்கல் பிழைகளால் அதிக கரண்ட் இழுத்து, காயில் வெந்து போகும் நிலை ஏற்படும் இதற்கு பெயர்தான் ஓவர்லோடு.

சிங்கிள் பேசிங் பாதுகாப்பு:
சிங்கிள் பேசிங்கினால் (Single phasing prevention) அதிகமாகுகின்ற ஓவர்லோடு கரண்டினை ஸ்டார்ட்டரில் உள்ள ஓவர்லோடு ரிலே (OverloadRelay) கணிக்கும் நேரத்திற்குள் இந்த எலக்ட்ரானிக் சிங்கிள் பேசிங் பிரிவெண்டர் கணித்து உடனடியாக (Instant Tripping) மின்சப்ளையை துண்டித்து விடுவதால் மோட்டார் காயிலுக்கு அதிக பதுகாப்பு கிடைக்கிறது.

ஸ்பீக்கர் மற்றும் மைக் பற்றிய தெளிவான விளக்கம்

ஸ்பீக்கர்(speaker):

ஒலி மின் அலைகளை ஒலி அலைகளாக மாற்றம் செய்ய ஸ்பீக்கர் பயன்படுகிறது. இந்த ஸ்பீக்கரின் மேற்புறம் உள்ள கோன் பேப்பரை மட்டும் கிழித்து எடுத்தால் அதற்குள் ஒரு சிறிய வட்டத்தில் ஸ்பை பேப்பர் இருக்கும். ஸ்பை பேப்பரை எடுத்துவிட்டால் பிறகு அதற்குள் வாய்ஸ் காயிலை பார்க்கலாம்.

வாய்ஸ் காயிலில் ஒலி மின் அலைகள் சென்றவுடன் வாய்ஸ்காயிலில் காந்த புலம் உண்டாகும். ஒலி மின் அலையின் தன்மைக்கு ஏற்றவாறு இந்த காந்த அலைகள் வாய்ஸ் காயிலில் உண்டாகும். வாய்ஸ் காயிலில் உண்டாகும் காந்தமும் ஏற்கனவே ஸ்பீக்கரில் உள்ள காந்தமும் இழுத்தும் தள்ளியும் அதிர்வு அடைகிறது.
இப்படி வாய்ஸ் காயில் அதிர்வு அடைவதால் வாய்ஸ் காயிலில் பொருத்தப்பாட்டுள்ள, ஸ்பை மற்றும் கோன் பேப்பர் அதிர்வு அடைகிறது. இந்த அதிர்வுகளால் காற்று அதிர்வடைந்து ஒலி அலைகளாக மாற்றம் அடைகிறது. நம் காதுகளில் கேட்கிறது மேலும் இதுவே ரேடியோ பாடுவதற்கு காரணம்.

மைக்(Mic):

ஸ்பீக்கரை போலவே தான் இதுவும் என்ன ஒரு சிறிய மாற்றம் என்றால். மைக்கில் உள்ள கோன் பேப்பரும் வாய்ஸ் காயிலும் மெல்லியதாக இருக்கும். வேறு வித்தியாசம் இல்லை. நாம் மைக்கில் பேசும் போது கோன் பேப்பர் அதிர்வு அடைந்து வாய்ஸ் காயில் அதிர்வு அடைகிறது. மைக்கில் உள்ள காந்தத்தை சுற்றிலும் உள்ள வாய்ஸ் காயில் அதிர்வு அடைவதால் வாய்ஸ் காயிலில் மின்சாரம் உண்டாகிறது. இதுவே ஒலி மின் அலையாகும்.

குறிப்பு:
மைக்கிற்கு பதில் ஸ்பீக்கரையும் பயன்படுத்தலாம். ஸ்பீக்கரில் உள்ள கோன் பேப்பர் தடிப்பாக உள்ளதால் நம் வாய்ஸ் அருகே ஸ்பீக்கரை வைத்துக் கொண்டு சத்தமாகப் பேச வேண்டும். இந்த ஸ்பீக்கரை கடைகளில் வாங்கும் போது அதன் ஓம்ஸ் அளவையும், வாட்ஸ் அளவையும் சொல்லி வாங்க வேண்டும்.

ஒலி அலை (Sound Waves) மற்றும் ஒலி மின் அலைகள் (Audio) பற்றிய தெளிவான விளக்கம்


ஒலி அலை (Sound Waves)

நாம் பேசும் போதும் பாடும் போதும் சாலைகளில் வாகனங்கள் செல்லும் போதும் காற்றானது அதிர்வு அடைந்து அலைகளாக மாற்றமடைந்து பரவுகிறது.
இந்த அலைகள் தான் நமது காதுகளில் ஒலி அலைகளாக கேட்கிறது.



ஒலி அலையின் வேகம் ஒரு நொடிக்கு 330 மீட்டர் ஆகும். ஒலி அலையின் அதிர்வு (frequency) 20 to 2000 சைகிள் ஆகும். ஒலி அலைகள் மைக் மூலமாக ஒலி மின் அலைகளாக மாற்றப்படுகிறது. ஒலி மின் அலையின் அதிர்வு (frequency) 20 to 2000 சைகிள் ஆகும்.

மேலும் ஒலி மின் அலையின் வேகம் ஒரு நொடிக்கு 3 லட்சம் கி.மீ.ஆகும்.

ஒலி மின் அலைகள் (Audio Waves)

நாம் ஒருவரிடம் பேசும் போது ஒரு குறிப்பிட்ட தூரம் வரைக்கும் தான் பேசமுடியும் . அறந்தாங்கியில் இருக்கும் ஒருவர் எவ்வளவு சத்தமாகப் பேசினாலும் புதுக்கோட்டையில் இருக்கும் மற்றொருவருக்கு கேட்காது. காரணம் நாம் பேசும் போது உண்டாகும் ஒலி அலைகள் குறிப்பிட்ட தூரத்தில் சென்று மறைந்து விடும். எனவே இந்த ஒலி அலைகளை ஒலி மின் அலைகளாக மாற்றிவிட்டால், இந்த ஒலி மின் அலைகள் கம்பிவழியாக உலகம் முழுவதும் ஒரு நொடியில் சென்றுவிடும்.




நாம் தொலைபேசியில் பேசும் போது நமது உரையாடல்கள் ரிஸீவரில் உள்ள மைக் மூலமாக ஒலிமின் அலைகளாக மாற்றம் அடைந்து கம்பி மூலமாக அடுத்தவருக்கு செல்கிறது. இதுவே ஒலி மின் அலைகள் எனப்படும். இந்த ஒலி மின் அலையின் வேகம் ஒரு நொடிக்கு 3 லட்சம் கி.மீ.ஆகும். எனவே தான் நம்மால் உலகம் முலுவதும் எளிதாகப் பேசமுடிகிறது.




நாம் மைக் முன்னாடி நின்று பேசும் போது இந்த மைக்கானது நமது பேச்சை ஒலிமின் அலைகளாக மாற்றிவிடுகிறது. பிறகு இந்த ஒலி மின் அலைகள் மைக் ஒயர்களின் மூலமாக ஆம்ளிபயர் பெட்டிக்கு சென்று விடுகிறது. ஒலி மின் அலைகள் ஆம்ளிபயரில் பல மடங்கு விரிவாக்கப்பட்டு ஸ்பீக்கருக்கு செல்கிறது. ஸ்பீக்கரில் இந்த ஒலி மின் அலைகள் ஒலி அலைகளாக மாற்றம் அடைந்து நமது காதுக்கு கேட்கிறது.

டயோடு மற்றும் ஜீனர் டயோடு பற்றிய தெளிவான விளக்கம் (What is Diode and Zener diode?)


டயோடு:

AC மின்சாரம் DC மின்சாரமாக மாற்றுவதற்கு டயோடுகள் பயன்படுகிறது. Resistor, capacitor களைப் போல டயோடுகளிலும் இருமுனை கம்பிகள் இருக்கும். இதில் ஒரு முனை ஆனோடு மற்றொரு முனை கேத்தோடு ஆகும்.

டயோடுகளின் கேதோடு முனையை அடையாளம் கண்டுகொள்வதற்காக கோடு அல்லது புள்ளி குறிக்கப்பட்டு இருக்கும். இதில் புள்ளி அல்லது கோடு குறிக்கப்படாத பகுதி ஆனோடு ஆகும்.


நாம் இந்த டயோடின் ஆனோடு பகுதியை AC மின்சாரத்தில் இனைத்தால் கேதோடு பகுதிக்கு பாஸிடிவ் மின்சாரம் கிடைக்கும். நாம் இந்த டயோடின் கேதோடு பகுதியை AC மின்சாரத்தில் இனைத்தால் ஆனோடு பகுதிக்கு நெகடிவ் மின்சாரம் கிடைக்கும்.

AC மின்சாரம் ஒரு நொடிக்கு 50 முறை பாஸிடிவாகவும் 50 முறை நெகடிவாகவும் மாறி மாறி கிடைக்கும். இதைத்தான் நாம் 50 Hz frequency என்கிறோம். இப்படி மாறி மாறி வரும் மின்சாரத்தை டயோடுகள் மூலமாக நெகடிவ் மின்சாரத்தை தணியாகவும் பாஸிடிவ் மின்சாரத்தை தணியாகவும் பிரித்து விடலாம்.

மேலும் டயோடுகளை பயன்படுத்தி ரேடியோ டிவிகளில் மின் அலைகளையும் பிரிக்கலாம்.

ஜீனர் டயோடு:





டிவி, கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களில் DC மின்சாரம் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் மின்சாரம் அதிகரித்தால் டிவி, கம்ப்யூட்டர் ஆகியவை மிகுந்த பதிப்புக்கு உள்ளாகும்.


ஆகவே இது போன்ற இடங்களில் ஜீனர் டயோடு பயன்படுத்தப்படுகிறது. மின்னனுவியல் சாதனங்களில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் மின்சாரம் அதிகரிக்கும் போது அந்த அதிகரித்த மின்சாரம் இந்த ஜீனர் டயோடு வழியாக எர்துக்கு சென்றுவிடும்.
ஆகவே மின்னனுவியல் சாதனங்கள் பாதிக்கப்படுவதில்லை


                                                   

எர்த் பற்றிய தெளிவான விளக்கம் (what is earth?)

மின்சாரம் பல நேரங்களில் உலோக பெட்டிக்குள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மெயின் switch, மீட்டர், இரும்பு குழாய்கள், அயர்ன்பாஸ், கிரைண்டர், மின்மோட்டார்கள், மின்விசிரி போன்ற பொருள்களின் வெளிப்புறம் (body) உலோகம் ஆகும்.




இந்த மின்சாதனங்களின் உள் பகுதியில் மின்சாரம் செல்லும் போது எதிர்பாராத விதமாக இதன் பாடியில் மின்சாரம் பாய்ந்துவிடும் வாய்ப்பு உள்ளது. அப்போது நாம் அந்த மின்சாதனங்களை தொட்டால் ஷாக் அடிக்கும்.


இது போன்ற ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக இதன் பாடியில் எர்த் இணைப்பு கொடுப்பார்கள். பூமியில் சுமார் ஒரு சதுரடி அகலத்தில் பள்ளம் வெட்டி அதில் இரும்பு பைப்பை அடித்துவிட்டு அதன் மேல்புறம் எர்த் கம்பியை இணைப்பார்கள்.



மின்சாரம் மின்சாதனங்களின் பாடியில் பாயும் வாய்ப்பு ஏற்பட்டால் அந்த மின்சாரம் வேகமாக இந்த எர்தின் வழியாக பூமிக்கு சென்று விடும்.



இந்த எர்த் பகுதியில் பூமிக்கு உள்ளாக இனைக்கப்பட்டுள்ள கம்பியை நன்றாக இறுக வைக்க உப்பு, கரி, தண்ணீர், நன்றாக ஊற்ற வேண்டும்.



இந்த எர்த் ஆனது மனிதனை விட மிசின்களுக்கு தான் மிகவும் பாதுகாப்பனதாக இருக்கும். ஆகவே கண்டிப்பாக இந்த எர்த் இணைப்பை அணைவரின் வீடுகளிலும் கொடுக்க வேண்டும்.





குறிப்பு:


ஒரு கம்பியில் உள்ள எர்த் இணைப்பு நன்றாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு பல்பின் பேஸ் (+Ve), நியூட்ரல் (-Ve) வோயருக்கு எப்படி மின் இணைப்பு கொடுத்தால் பல்பானது எரிகிறதோ அதேபோல் பேஸ்க்கும் (+Ve), எர்துக்கும் (Gnd) மின் இணைப்பு கொடுத்தால் பல்பானது எரிய வேண்டும் அப்படி எரிந்தால் எர்த் இணைப்பானது மிகவும் நன்றாக உள்ளது என்று அர்த்தம்.


மின்னியல் மற்றும் மின்னனுவியல் உபகரணங்கள் (Electrical and Electronics Equipment)


லையன் டெஸ்டர் (Line tester):


இது மின்சார ஒயர்களில் மின்சாரம் வருவதை தெரிந்து கொள்ள உதவிகிறது.

ஸ்குரு டிரைவர்(Screwdrivers):


இது ந்மது உபயோகத்திற்கு ஏற்ப பல அளவுகளில் கிடைக்கிறது.

ஹாமர் (Hammer):


இது ஆணிகளை அடிப்பதற்கும்,ஜம்பர் அடிப்பதற்கும் பயன்படுகிறது.

ஹான்ட் மிஷின் டிரில்:


இதன் மூலம் உருதியான சுவற்றிலும், சீலிங்குகளிலும்,இரும்பு சட்டங்களிலும் துளையிடலாம். மேலும் இதை பயன்படுத்தும்போது ரப்பர் கையுரை அணிந்து பயன்படுத்துவது நல்லது.

கட்டிங் பிளேயர்:

இது கம்பிகளை முறுக்குவதற்கும் சிறிய போல்டுகளை முறுக்குவதற்கும் பயன்படுகிறது.

நோஸ் பிளேயர்:

இது சிறிய ஒயர் கம்பிகளை முறுக்குவதற்கு பயன்படுகிறது.

பேரிங்புல்லர்:

இது மோட்டார்களின் பேரிங்கை கழட்டுவதற்கு பயன்படுகிறது.

ஸ்லீவ் ரிமூவர்:

ஒயர் கம்பிகளின் மீது உள்ள பிளாஸ்டிக் உரைகளை நீக்கவும் சிறிய ஒயர்களை வெட்டவும் பயன்படுகிறது.

சால்ரிங் அயன்:

ஒயர்களை ஈயப் பற்றவைப்பு செய்ய பயன்படுகிறது. செம்பு ஒயர்கலின் முனைகளை அழுகில்லாமல் சுத்தம் செய்து அதன் மீது சால்ரிங் பேஸ்டை தடவி பற்றவைக்க வேண்டும்.

மல்டி மீட்டர்:

இது AC அளவுகள் DC அளவுகள் மற்றும் மின்தடை அளவான Ohms, கன்டினிவிட்டி டெஸ்ட் ஆகிய அனைத்து விதமான அளவையும் அளப்பதற்கு ப்யபடுவதால் இது மல்டி மீட்டர் ஆகும்.

வோல்ட் மீட்டர்:

இது மின்சாரத்தின் அழுத்தத்தை (voltage) அளக்க பயன்படுகிறது. இதை parallel முறையில் இனைக்க வேண்டும்.

அம்மீட்டர்:

இது அழுத்ததின் மூலம் செல்லக்கூடிய மின்சாரத்தை(current) அளப்பதற்கு பயன்படுகிறது.

டங் டெஸ்டர்:

இதுவும் அம்மீட்டரைப் போன்றே Current அளப்பதற்குப் பயன்படுகிறது.

SWG:




SWG என்றால் stander wire Gage என்று பெயர். இதை கேஜ் என்று கூறுவார்கள். இது ஒயர்களை அளப்பதற்கு பயன்படுகிறது. மேலும் இதை துள்ளியமாக அளப்பதற்கு மைக்ரோ ஸ்ரு கேஜ் என்னும் கருவி பயன்படுகிறது.

மெக்கர்:


மெகா ஓம்ஸை அளக்கப் பயன்படும் மீட்டருக்கு மெக்கர் என்று பெயர். இரண்டு தனிதனி ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று ஷாட் ஆகிறதா என்பதை கண்டுபிடிக்க மெக்கரின் டெஸ்ட் ஒயர் இரண்டையும் வைத்து மெக்கரை சுற்ற வேண்டும். மெக்கரின் முல்லானது ஒரு மெகா ஓம்ஸ்க்கு குறைவாக காட்டினால் ஒயரானது ஷாட் ஆகிறது என்று அர்த்தம்.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.