இரண்டு
மூலப்பொருள்கள் ஒன்றோடு
ஒன்று உராய்வதாலும் மின்சாரம்
உற்பத்தி ஆகும்.
நமது
உடலில் 18
வகையான
மூலப்பொருள்கள் உள்ளன.
ஆகவே
நமது கைகளை ஒன்றோடு ஒன்று
தேய்க்கும் போது எலக்ட்ரான்கள்
நகர்ந்து மின்சாரம்
உண்டாகிறது.ஆகவே
நமது கையானது சூடேறுகிறது.
காற்றில்
உள்ள மூலக்கூறுகளுடன் மேகங்கள்
உராய்வதால் ஆகாயத்தில்
மின்சாரம் உண்டாகிறது.
இந்த
மின்சாரம் பூமியில் பாயும்போது
இடிமின்னல் உண்டாகிறது.
இடி,மின்னல்
இரண்டும் ஒரே நேரத்தில்
ஏற்பட்டாலும் மின்னல் முதலில்
நம் கண்ணுக்கு தெரியும்.
சிறிது
நேரம் கழித்து இடி சத்தம்
கேட்கும்.
காரணம்
ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு
3
லட்சம்
கிலோ மீட்டர் ஆகும்.
ஒலியின்
வேகம் ஒரு நொடிக்கு 330
மீட்டர்
மட்டும் ஆகும்.
இந்த
மின்சாரம் உயரமான மரங்கள்
கட்டிடங்கள் மூலமாக பூமிக்கு
பாய்ந்து செல்வதால் மரங்கள்
எரிந்து விடுகின்றது கட்டிடங்கள்
இடிந்து விடுகின்றன.
உயரமான
பொருள் எதுவும் கிடைக்காத
போது நமது தலையில் விழுந்துவிடும்.
ஆகவே
பரந்த வெட்ட வெளியில் தனியாக
செல்லக் கூடாது.
தனியாக
உள்ள மரத்தின் அடியில் நிற்க
கூடாது.
உயரமான
கட்டிடங்களின் மீது தடித்த
கம்பிகளை பொருத்தி அதை
பூமியுடன் இனைப்பு ஏற்படுத்தி
எர்த் செய்து விடுவார்கள்.
கட்டிடத்தை
இடி மின்சாரம் தாக்கும் போது
மின்சாரம் வேகமாக பூமிக்கு
சென்றுவிடும்.
அப்போது
கட்டிடம் பதுகாப்பாக இருக்கும்.
கட்டிடத்தின்
மீது அமைக்கப்படும் அந்த
தடித்த கம்பிக்குப் பெயர்
இடிதாங்கி எனப்படும்.
இடி
மின்னலில் உண்டாகும் மின்சாரம்
பல லட்சக்கணக்கான வோல்டு
அழுத்தமுள்ளதாக இருக்கும்.
ஆகவே
இதன் தாக்குதல் மிகுந்த ஆபத்தை
ஏற்படுத்தும்.