ஸ்பீக்கர்(speaker):
ஒலி
மின் அலைகளை ஒலி அலைகளாக
மாற்றம் செய்ய ஸ்பீக்கர்
பயன்படுகிறது. இந்த
ஸ்பீக்கரின் மேற்புறம் உள்ள
கோன் பேப்பரை மட்டும் கிழித்து
எடுத்தால் அதற்குள் ஒரு சிறிய
வட்டத்தில் ஸ்பை பேப்பர்
இருக்கும். ஸ்பை
பேப்பரை எடுத்துவிட்டால்
பிறகு அதற்குள் வாய்ஸ் காயிலை
பார்க்கலாம்.
வாய்ஸ்
காயிலில் ஒலி மின் அலைகள்
சென்றவுடன் வாய்ஸ்காயிலில்
காந்த புலம் உண்டாகும்.
ஒலி மின்
அலையின் தன்மைக்கு ஏற்றவாறு
இந்த காந்த அலைகள் வாய்ஸ்
காயிலில் உண்டாகும்.
வாய்ஸ்
காயிலில் உண்டாகும் காந்தமும்
ஏற்கனவே ஸ்பீக்கரில் உள்ள
காந்தமும் இழுத்தும் தள்ளியும்
அதிர்வு அடைகிறது.
இப்படி
வாய்ஸ் காயில் அதிர்வு அடைவதால்
வாய்ஸ் காயிலில் பொருத்தப்பாட்டுள்ள,
ஸ்பை மற்றும்
கோன் பேப்பர் அதிர்வு அடைகிறது.
இந்த அதிர்வுகளால்
காற்று அதிர்வடைந்து ஒலி
அலைகளாக மாற்றம் அடைகிறது.
நம் காதுகளில்
கேட்கிறது மேலும் இதுவே ரேடியோ
பாடுவதற்கு காரணம்.
மைக்(Mic):
ஸ்பீக்கரை
போலவே தான் இதுவும் என்ன ஒரு
சிறிய மாற்றம் என்றால்.
மைக்கில்
உள்ள கோன் பேப்பரும் வாய்ஸ்
காயிலும் மெல்லியதாக இருக்கும்.
வேறு வித்தியாசம்
இல்லை. நாம்
மைக்கில் பேசும் போது கோன்
பேப்பர் அதிர்வு அடைந்து
வாய்ஸ் காயில் அதிர்வு அடைகிறது.
மைக்கில்
உள்ள காந்தத்தை சுற்றிலும்
உள்ள வாய்ஸ் காயில் அதிர்வு
அடைவதால் வாய்ஸ் காயிலில்
மின்சாரம் உண்டாகிறது.
இதுவே ஒலி
மின் அலையாகும்.
குறிப்பு:
மைக்கிற்கு
பதில் ஸ்பீக்கரையும்
பயன்படுத்தலாம். ஸ்பீக்கரில்
உள்ள கோன் பேப்பர் தடிப்பாக
உள்ளதால் நம் வாய்ஸ் அருகே
ஸ்பீக்கரை வைத்துக் கொண்டு
சத்தமாகப் பேச வேண்டும்.
இந்த ஸ்பீக்கரை
கடைகளில் வாங்கும் போது அதன்
ஓம்ஸ் அளவையும், வாட்ஸ்
அளவையும் சொல்லி வாங்க வேண்டும்.