டயோடு:
AC மின்சாரம் DC மின்சாரமாக மாற்றுவதற்கு டயோடுகள் பயன்படுகிறது. Resistor, capacitor களைப் போல டயோடுகளிலும் இருமுனை கம்பிகள் இருக்கும். இதில் ஒரு முனை ஆனோடு மற்றொரு முனை கேத்தோடு ஆகும்.
டயோடுகளின்
கேதோடு முனையை அடையாளம்
கண்டுகொள்வதற்காக கோடு
அல்லது புள்ளி குறிக்கப்பட்டு
இருக்கும். இதில்
புள்ளி அல்லது கோடு குறிக்கப்படாத
பகுதி ஆனோடு ஆகும்.
நாம்
இந்த டயோடின் ஆனோடு பகுதியை
AC மின்சாரத்தில்
இனைத்தால் கேதோடு பகுதிக்கு
பாஸிடிவ் மின்சாரம் கிடைக்கும்.
நாம் இந்த
டயோடின் கேதோடு பகுதியை AC
மின்சாரத்தில்
இனைத்தால் ஆனோடு பகுதிக்கு
நெகடிவ் மின்சாரம் கிடைக்கும்.
AC மின்சாரம்
ஒரு நொடிக்கு 50 முறை
பாஸிடிவாகவும் 50 முறை
நெகடிவாகவும் மாறி மாறி
கிடைக்கும். இதைத்தான்
நாம் 50 Hz frequency என்கிறோம்.
இப்படி மாறி
மாறி வரும் மின்சாரத்தை
டயோடுகள் மூலமாக நெகடிவ்
மின்சாரத்தை தணியாகவும்
பாஸிடிவ் மின்சாரத்தை தணியாகவும்
பிரித்து விடலாம்.
மேலும்
டயோடுகளை பயன்படுத்தி ரேடியோ
டிவிகளில் மின் அலைகளையும்
பிரிக்கலாம்.
டிவி,
கம்ப்யூட்டர்
போன்ற சாதனங்களில் DC
மின்சாரம்
ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு
விதமாக இருக்கும். ஒரு
குறிப்பிட்ட அளவிற்கு மேல்
மின்சாரம் அதிகரித்தால்
டிவி, கம்ப்யூட்டர்
ஆகியவை மிகுந்த பதிப்புக்கு
உள்ளாகும்.
ஆகவே
இது போன்ற இடங்களில் ஜீனர்
டயோடு பயன்படுத்தப்படுகிறது.
மின்னனுவியல்
சாதனங்களில் ஒரு குறிப்பிட்ட
அளவிற்கு மேல் மின்சாரம்
அதிகரிக்கும் போது அந்த
அதிகரித்த மின்சாரம் இந்த
ஜீனர் டயோடு வழியாக எர்துக்கு
சென்றுவிடும்.
ஆகவே
மின்னனுவியல் சாதனங்கள்
பாதிக்கப்படுவதில்லை.