ஒலி
அலை (Sound Waves)
நாம்
பேசும் போதும் பாடும் போதும்
சாலைகளில் வாகனங்கள் செல்லும்
போதும் காற்றானது அதிர்வு
அடைந்து அலைகளாக மாற்றமடைந்து
பரவுகிறது.
இந்த
அலைகள் தான் நமது காதுகளில்
ஒலி அலைகளாக கேட்கிறது.
ஒலி
அலையின் வேகம் ஒரு நொடிக்கு
330 மீட்டர்
ஆகும். ஒலி
அலையின் அதிர்வு (frequency)
20 to 2000 சைகிள்
ஆகும். ஒலி
அலைகள் மைக் மூலமாக ஒலி மின்
அலைகளாக மாற்றப்படுகிறது.
ஒலி மின்
அலையின் அதிர்வு (frequency)
20 to 2000 சைகிள்
ஆகும்.
மேலும்
ஒலி மின் அலையின் வேகம் ஒரு
நொடிக்கு 3 லட்சம்
கி.மீ.ஆகும்.
ஒலி
மின் அலைகள் (Audio Waves)
நாம்
ஒருவரிடம் பேசும் போது ஒரு
குறிப்பிட்ட தூரம் வரைக்கும்
தான் பேசமுடியும் .
அறந்தாங்கியில்
இருக்கும் ஒருவர் எவ்வளவு
சத்தமாகப் பேசினாலும்
புதுக்கோட்டையில் இருக்கும்
மற்றொருவருக்கு கேட்காது.
காரணம் நாம்
பேசும் போது உண்டாகும் ஒலி
அலைகள் குறிப்பிட்ட தூரத்தில்
சென்று மறைந்து விடும்.
எனவே இந்த
ஒலி அலைகளை ஒலி மின் அலைகளாக
மாற்றிவிட்டால், இந்த
ஒலி மின் அலைகள் கம்பிவழியாக
உலகம் முழுவதும் ஒரு நொடியில்
சென்றுவிடும்.
நாம்
தொலைபேசியில் பேசும் போது
நமது உரையாடல்கள் ரிஸீவரில்
உள்ள மைக் மூலமாக ஒலிமின்
அலைகளாக மாற்றம் அடைந்து
கம்பி மூலமாக அடுத்தவருக்கு
செல்கிறது. இதுவே
ஒலி மின் அலைகள் எனப்படும்.
இந்த ஒலி
மின் அலையின் வேகம் ஒரு நொடிக்கு
3 லட்சம்
கி.மீ.ஆகும்.
எனவே தான்
நம்மால் உலகம் முலுவதும்
எளிதாகப் பேசமுடிகிறது.
நாம்
மைக் முன்னாடி நின்று பேசும்
போது இந்த மைக்கானது நமது
பேச்சை ஒலிமின் அலைகளாக
மாற்றிவிடுகிறது. பிறகு
இந்த ஒலி மின் அலைகள் மைக்
ஒயர்களின் மூலமாக ஆம்ளிபயர்
பெட்டிக்கு சென்று விடுகிறது.
ஒலி மின்
அலைகள் ஆம்ளிபயரில் பல மடங்கு
விரிவாக்கப்பட்டு ஸ்பீக்கருக்கு
செல்கிறது. ஸ்பீக்கரில்
இந்த ஒலி மின் அலைகள் ஒலி
அலைகளாக மாற்றம் அடைந்து
நமது காதுக்கு கேட்கிறது.