மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

AC-ஐ பயன்படுத்தக் கூடாது ஏன்?

ஒரு டன் ஏ.சி எவ்வளவு மின்னாற்றலை எடுக்கும்?
ஒரு டன் AC = 12000 Btu/hr

இங்கு Btu என்பதன் விரிவாக்கம்
B-British
T-Thermal
U-Unit
Btu- British thermal unit என்பதாகும்.
ஒரு kilo watts என்பது = 3416 Btu/hr ஆகும்.

ஒரு டன் AC-க்கு உண்டான பவரைக் கணக்கிடுதல்:
ஒரு டன் AC = 12000/3416 = 3.512 Kw ஆகும்.

நாம் ஒரு மணிநேரம் ஒரு டன் AC-ஐ பயன்படுத்தினால் 3.512 kw Power-ஐ எடுக்கும். அதாவது 3512  watts ஆகும்.

350 வீடுகள் இப்படி ஒரு மணிநேரம் ஒரு டன் AC-ஐ பயன்படுத்தினால் 350*3.512 = 1229.2 kw அதாவது 1.2292 Mega watts ஆகும்.  இது அணைத்துமே ஒரு மணிநேரத்திற்க்கு உண்டான மதிப்பு ஆகும்.

சற்று எண்ணிப் பாருங்கள் நம்முடைய நாட்டில் வெறும் 350 வீடுகள் மட்டும்தான் உள்ளதா.
இந்த  AC பயன்பாட்டிற்க்கு மட்டும் ஒரு தொகையான மின்சாரம் ஒவ்வொரு நாளும் வீனாகிறது. இந்த AC பயன்பாடுகள் குறைந்தாளே குறிப்பிட்ட அளவு மின்சாரம் பாமரமக்களுக்கும், விவசாயங்களுக்கும் எளிதாக கிடைக்கும்.

நம்முடைய அரசாங்கம் எதிர்காலத்தை கருதி AC பயன்பாடுகள் மருத்துவமணைகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்ற இடங்களில் பயன்படுத்துவதை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் எதிர்கால சமுதாயத்திற்கு மின்சாரம் என்பது மிகப் பெரிய கேல்விக்குறியாகிவிடும்.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.