மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

AC Terms – Definitions (மாறுதிசை மின்னோட்ட விதிமுறைகள் - வரையறைகள்)

Cycle 

AC voltage ஒரு முறை அதன் அளவிலும் திசையிலும் மாறி துவக்க நிலைக்கு வருவதற்கு cycle என்று பெயர். இதில் ஒரு +ve பாதியும் -ve பாதியும் உண்டு.


Time Period (T)

ஒரு cycle முடிவற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்திற்கு time period என்று பெயர். இதை T என்ற எழுத்து கொண்டு குறிக்கிறோம்.

 Frequency (F)

ஒரு வினாடியில் ஏற்படும் cycleகளின் எண்ணிக்கையை frequency என்கிறோம். நமது supplyயின் frequency 50 cycle/sec ஆகும். அதாவது ஒரு செகண்டில் 50 cycle உள்ளன என்பது பொருள்.
இதை  F என்ற எழுத்தாலும், Hertz (Hz)  என்ற unit-லும் குறிப்பிடுகிறோம்.

Amplitude

ஒரு cycle-லில் இரண்டு அதிகமான அளவுகள் இருக்கும். ஒன்று +ve maximum மற்றொன்று -ve maximum இந்த அதிகமான அளவிற்கு  amplitude என்று பெயர்.

Instantaneous Values


AC current or voltage-ன் அளவு நேரத்திற்கு நேரம் மாறுபடும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அதன் அளவு என்ன இருக்கிறதோ அதற்கு  Instantaneous Values என்று பெயர்.

Maximum value or Peak value or Crest value

ஒரு cycle-லில் மிக அதிகமான அளவாக இருக்கும் Instantaneous Values-க்கு maximum value என்று பெயர்.

Average value



ஒரு cycle-லில் பல இடங்களில் உள்ள Instantaneous Values-வை எடுத்து அதை கூட்டி சராசரி கண்டுபிடித்து கிடைக்கும் மதிப்பே average value ஆகும்.

Effective value or Root mean square value (R.M.S) value

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அளவு மின்தடையில் குறிப்பிட்ட அளவு AC current  செல்லும் போது ஏற்படுத்தும் வெப்பத்தை அதே நேரத்தில் அதே அளவு மின்தடையில் அதே அளவு DC current சென்று ஏற்படுத்துமேயானால் மின்தடையில் சென்ற DC current-ன் அளவே AC  current-ன் RMS value ஆகும்.

Phase
In-Phase
Phase-Difference

phase என்பது இரண்டு AC Component-களுக்கு இடையில் உள்ள relative positionஐ குறிக்கிறது. அதாவது current மற்றும் voltage அல்லது இரண்டு current அல்லது இரண்டு voltage இவைகளுக்கு இடையில் உள்ள relative positionஐ குறிக்கிறது என்று அர்த்தம்.
என்ற எழுத்து phase difference angle எத்தனை degree என்பதக் குறிக்கிறது.

Form factor
Form factor = R.M.S value/Average value

Crest or Peak or Amplitude factor
Peak factor = Maximum value/R.M.S value

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.