மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

USB-ஐ பற்றிய ஒரு பார்வை

இந்த கட்டுரையானது USB ஐ பற்றிய மேலோட்டமான பார்வை ஆகும். இருந்தாலும் இணையதள நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நன்புகிறேன்.

USB Connector:

USB என்பதன் விரிவாக்கம் Universal Serial Bus Connector என்பதாகும்.


இதன் செயல்பாடு Power மற்றும் Data பரிமாற்றம் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படிகின்றன.

வளர்ந்த மற்றும் பெரிய நிறுவனங்களான இன்டெல்(Intel), மைக்ரோசாப்ட்(Microsoft), டெல்(Dell), ஐ.பி.எம்(IBM) போன்ற நிறுவனங்களின் கணினி சாதனங்களை இணைக்கப் பயன்படுகிறது.

மேலும் இந்த USB-ஆனது Mouse, Keyboard, Cameras, Printers, Scanners, Laptop ஆகியவற்றின் Power cable ஆகவும் மற்றும் Data Cable ஆகவும் பயன்படுகின்றது.

USB ஆனது கணினியின் சாதனங்களில் மட்டுமல்லாமல் இது தொலைக்காட்சி(Television), மொபைல் சார்ஜர் (Mobile Phone Charger), Multimedia Players ஆகியவற்றிலும் இனிமேல் வரவிறுக்கும் சாதனங்களிலும் இதன் பயன்படுகள் இருக்கும் என்பது தின்னம்.

இந்த USB Connector ஆனது அதன் வடிவம்(Shape) மற்றும் பின்களின்(Pins) எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து பல்வேறு வகையான  USB Connector-ள் உள்ளன.

நான் இங்கு 4-ங்கு பின்கள் உடைய Standard “A” type USB Connector ஐ பற்றி எழுதியுள்ளேன்.

உலோக உறை(Metal Casing):



இது  USB Connector-ன் ஆயுளை நீடிக்கிறது மற்றும் Mechanical Stresses - இயந்திர அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கிறது.

இதன் இரண்டு வெட்டுப் பிரிவுகள் (இரண்டு ஓட்டைகள்) ஆனது  Female  USB Connector உடன் இணைப்பை ஏற்படுத்தப் பயன்படுகின்றது.

இது தான் Male  USB Connector.

இது தான் Female  USB Connector.

'A' type  USB Connector-ன் Pin-களின் விவரம்:

Pin 1 : இது Voltage (+) [மின்னழுத்தம்]
Pin 2 : Data (+)
Pin 3 : Data (-)
Pin 4 : Ground (-) [தரை இணைப்பு]

'A' type  USB Connector Pin-களின் கலர் விவரங்கள்: 


Pin 1: Voltage (+) சிவப்பு நிரம்
Pin 2 : Data (+) பச்சை நிரம்
Pin 3 : Data (-) வெள்ளை நிரம்
Pin 4 : Ground (-) கருப்பு நிரம்.

இதில் Pin 1 மற்றும் Pin 2 ஆகியவற்றிற்கு மின்னழுத்தம்(Voltage) கொடுக்க வேண்டும்.

மேலும் Pin 2 மற்றும் Pin 3 ஆகியவற்றிற்கு தரவு(Data) இணைப்பு கொடுக்க வேண்டும்.

USB – Universal Serial Bus-களின் படங்கள்:











பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.