மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

மின்மாற்றி தொடர்-1 (Transformer -1)

மின்மாற்றி என்பது மின்னியல் துறையில் மிகவும் இன்றியமையாத உபகரணம் ஆகும். இதன் வடிவமானது மிகவும் எளிமையானது.  ஆகவே இதை வடிவமைப்பதும் எளிது. மேலும் இதில் எந்தவிதமான சுழலும் பகுதிகளும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்த மின்மாற்றியானது Power System, Power Transmission மற்றும் Distribution ஆகிய இடங்களில் மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது.

இது உயர் மின்னழுத்தத்தை குறைந்த மின்னழுத்தமாக மாற்றுவதற்கும்,  மேலும் தேவைப்படும் இடங்களுக்கு தேவையான மின்னழுத்தத்தை குறைத்து மற்றும் அதிகரித்து கொடுப்பதற்கு பயன்படுகிறது. (Step Down and Step Up)

மின்மாற்றி (Transformer)
இதில் Primary Coil மற்றும் Secondary Coil என்ற இரண்டு அமைப்புகள் இருக்கும்.  இந்த இரண்டு விதமான Coil களுமே Core என்ற அமைப்பில் சுற்றப்பட்டு இருக்கும்.

இதில் Primary coil க்கு AC மின்னழுத்தம் கொடுக்கும் போது core என்ற அமைப்பில் மின்காந்த புலம் ஏற்பட்டு core முழுவதும் பரவத் தொடங்குகிறது.
மேலும் Secondary coil -ல் அந்த மின்காந்த புலம் சென்றதும் secondary coil ஆனது core -ல் சுற்றப்பட்டுள்ள சுற்றுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மின்னழுத்தமானது வெளியில் கிடைக்கிறது.
கவனிக்க:
அதிக சுற்றுகள் இருந்தால் அதிகமான மின்னழுத்தமும் குறைந்த சுற்றுகள் இருந்தால் குறைவான மின்னழுத்தமும் கிடைக்கும்.

இந்த மின்மாற்றியானது Faraday என்ற அறிஞரின் மினகாந்த தூண்டல்  தத்துவத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது.


இந்த Primary coil -லிருந்து Secondary coil -க்கு core -ன் வழியாக மின்காந்த புலம் சென்று secondary coil -ல் மின்சாரம் (Induced emf) கிடைக்கிறது.  இதைத்தான் Mutual Induction Principle என்று கூறுகிறோம்.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.