மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

மின்மாற்றி தொடர்-4 (Transformer -4)

Equivalent Circuit எதற்காக?
எந்தவொரு Electrical Devices ஐயும் இந்த Equivalent Circuit ஆல் அதன் செயல்திறன் மற்றும் மின்னழுத்த இறக்கம் (Voltage Drops) போன்றவற்றை எளிமையான முறையில் ஆராயலாம்.
Vector Diagram எதற்காக?
மின்மாற்றியானது AC யில் வேலை செய்யும் போது அதன் Primary மற்றும் Secondary வைண்டிங்குகளில் நிலவும் மின்னழுத்த அளவுகள் மற்றும் மின்னழுத்த இறக்கம் (Voltage Drop) மற்றும் மின்னோட்டம் ஆகிவற்றின் திசையை வரைபடம் மூலமாக வரைவதையே Vector Diagram என்கிறோம்.

நல்ல மின்மாற்றியை (Transformer) தேர்ந்தெடுப்பது எப்படி?
நல்ல மின்மாற்றியை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் அதனுடைய Efficiency மற்றும் Regulation மதிப்புகளை நன்கு ஆராய வேண்டும்.

இந்த Efficiency மற்றும் Regulation ஆகியவற்றை மின்மாற்றியில் சோதிப்பதற்கு Primary வைண்டிங்கையோ அல்லது Secondary வைண்டிங்கையோ நாம் பயன்படுத்தலாம்.பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.