மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

மின்மாற்றி தொடர்-3 (Transformer -3)

EMF Equation எதற்காக?
ரு மின்மாற்றியில் தூண்டப்படும் மின்காந்த புலத்தின் (Induced emf) அளவு நமக்கு மிக அவசியமாகிறது.
அதாவது,  core -ன் குறுக்குவெட்டை பொறுத்தும் அதன் மின்காந்த புல அடர்த்தியைப் (Flex Density) பொறுத்தும், Primary மற்றும் Secondary வைண்டிங்குகளில் அமையக்கூடிய சுற்றுகளின் எண்ணிக்கையை காணவே இந்த சமன்பாடு (Equation) பெரிதும் உதவுகிறது.

Primary Side

E1 = 4.44fN1 Øm
E1 = 4.44fN1BmA.    (Øm= BmA)

Secondary Side

E2 = 4.44fN2 Øm
E2 = 4.44fN2BmA.    (Øm= BmA)

Transformer on No Load:
அதாவது மின்மாற்றியின் secondary  -யில் எந்தவிதமான பழுவும் (Load) இணைப்பு செய்யப்படாமல் இருந்தால் அது No Load என்று கருதப்படுகிறது.


Transformer on Load:
மின்மாற்றியின் secondary -யில் பழுவானது (Load) இணைப்புச் செய்யப்பட்டு இருந்தால் அது ON Load என்று கருதப்படுகிறது.

காந்தபுல கசிவு or காந்தவிசைக் கோடுகள் (Leakage Fluxes):
நாம் AC Supply யை மின்மாறியின் Primary வைண்டிங்கில் கொடுக்கும் போது அந்த வைண்டிங் ஆனது core -ல் சுற்றப்பட்டு இருக்கும்.  அதில் மின்காந்த புலம் உருவாகி core -ன் வழியாக சென்று secondary வைண்டிங்கை சென்றடையும் அப்போது core -ல் சுற்றப்பட்டுள்ள வைண்டிங் சுருள்களுக்கு இடையே காற்று இடைவெளி வழியாகவும் சென்று காந்த புலமானது தனது சுற்றுப் பாதையை முடித்துக் கொள்ளும்.  இதனையே Leakage Flux என்கிறோம்.

மின்மாற்றி தொடர்:

மின்மாற்றி தொடர்-1 (Transformer -1)
மின்மாற்றி தொடர்-2 (Transformer -2)
மின்மாற்றி தொடர்-3 (Transformer -3)

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.