மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

ஸ்பீக்கர் மற்றும் மைக் பற்றிய தெளிவான விளக்கம்

ஸ்பீக்கர்(speaker):

ஒலி மின் அலைகளை ஒலி அலைகளாக மாற்றம் செய்ய ஸ்பீக்கர் பயன்படுகிறது. இந்த ஸ்பீக்கரின் மேற்புறம் உள்ள கோன் பேப்பரை மட்டும் கிழித்து எடுத்தால் அதற்குள் ஒரு சிறிய வட்டத்தில் ஸ்பை பேப்பர் இருக்கும். ஸ்பை பேப்பரை எடுத்துவிட்டால் பிறகு அதற்குள் வாய்ஸ் காயிலை பார்க்கலாம்.

வாய்ஸ் காயிலில் ஒலி மின் அலைகள் சென்றவுடன் வாய்ஸ்காயிலில் காந்த புலம் உண்டாகும். ஒலி மின் அலையின் தன்மைக்கு ஏற்றவாறு இந்த காந்த அலைகள் வாய்ஸ் காயிலில் உண்டாகும். வாய்ஸ் காயிலில் உண்டாகும் காந்தமும் ஏற்கனவே ஸ்பீக்கரில் உள்ள காந்தமும் இழுத்தும் தள்ளியும் அதிர்வு அடைகிறது.
இப்படி வாய்ஸ் காயில் அதிர்வு அடைவதால் வாய்ஸ் காயிலில் பொருத்தப்பாட்டுள்ள, ஸ்பை மற்றும் கோன் பேப்பர் அதிர்வு அடைகிறது. இந்த அதிர்வுகளால் காற்று அதிர்வடைந்து ஒலி அலைகளாக மாற்றம் அடைகிறது. நம் காதுகளில் கேட்கிறது மேலும் இதுவே ரேடியோ பாடுவதற்கு காரணம்.

மைக்(Mic):

ஸ்பீக்கரை போலவே தான் இதுவும் என்ன ஒரு சிறிய மாற்றம் என்றால். மைக்கில் உள்ள கோன் பேப்பரும் வாய்ஸ் காயிலும் மெல்லியதாக இருக்கும். வேறு வித்தியாசம் இல்லை. நாம் மைக்கில் பேசும் போது கோன் பேப்பர் அதிர்வு அடைந்து வாய்ஸ் காயில் அதிர்வு அடைகிறது. மைக்கில் உள்ள காந்தத்தை சுற்றிலும் உள்ள வாய்ஸ் காயில் அதிர்வு அடைவதால் வாய்ஸ் காயிலில் மின்சாரம் உண்டாகிறது. இதுவே ஒலி மின் அலையாகும்.

குறிப்பு:
மைக்கிற்கு பதில் ஸ்பீக்கரையும் பயன்படுத்தலாம். ஸ்பீக்கரில் உள்ள கோன் பேப்பர் தடிப்பாக உள்ளதால் நம் வாய்ஸ் அருகே ஸ்பீக்கரை வைத்துக் கொண்டு சத்தமாகப் பேச வேண்டும். இந்த ஸ்பீக்கரை கடைகளில் வாங்கும் போது அதன் ஓம்ஸ் அளவையும், வாட்ஸ் அளவையும் சொல்லி வாங்க வேண்டும்.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.