மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

இடி மின்னல் - Thunder

இரண்டு மூலப்பொருள்கள் ஒன்றோடு ஒன்று உராய்வதாலும் மின்சாரம் உற்பத்தி ஆகும். நமது உடலில் 18 வகையான மூலப்பொருள்கள் உள்ளன. ஆகவே நமது கைகளை ஒன்றோடு ஒன்று தேய்க்கும் போது எலக்ட்ரான்கள் நகர்ந்து மின்சாரம் உண்டாகிறது.ஆகவே நமது கையானது சூடேறுகிறது.காற்றில் உள்ள மூலக்கூறுகளுடன் மேகங்கள் உராய்வதால் ஆகாயத்தில் மின்சாரம் உண்டாகிறது. இந்த மின்சாரம் பூமியில் பாயும்போது இடிமின்னல் உண்டாகிறது. இடி,மின்னல் இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும் மின்னல் முதலில் நம் கண்ணுக்கு தெரியும். சிறிது நேரம் கழித்து இடி சத்தம் கேட்கும். காரணம் ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் ஆகும். ஒலியின் வேகம் ஒரு நொடிக்கு 330 மீட்டர் மட்டும் ஆகும்.

இந்த மின்சாரம் உயரமான மரங்கள் கட்டிடங்கள் மூலமாக பூமிக்கு பாய்ந்து செல்வதால் மரங்கள் எரிந்து விடுகின்றது கட்டிடங்கள் இடிந்து விடுகின்றன. உயரமான பொருள் எதுவும் கிடைக்காத போது நமது தலையில் விழுந்துவிடும். ஆகவே பரந்த வெட்ட வெளியில் தனியாக செல்லக் கூடாது. தனியாக உள்ள மரத்தின் அடியில் நிற்க கூடாது.உயரமான கட்டிடங்களின் மீது தடித்த கம்பிகளை பொருத்தி அதை பூமியுடன் இனைப்பு ஏற்படுத்தி எர்த் செய்து விடுவார்கள். கட்டிடத்தை இடி மின்சாரம் தாக்கும் போது மின்சாரம் வேகமாக பூமிக்கு சென்றுவிடும். அப்போது கட்டிடம் பதுகாப்பாக இருக்கும். கட்டிடத்தின் மீது அமைக்கப்படும் அந்த தடித்த கம்பிக்குப் பெயர் இடிதாங்கி எனப்படும்.

இடி மின்னலில் உண்டாகும் மின்சாரம் பல லட்சக்கணக்கான வோல்டு அழுத்தமுள்ளதாக இருக்கும். ஆகவே இதன் தாக்குதல் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும்.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.