மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

வசீகரிக்கும் கதவு விழக்கு (LED Door Light)


நன்பர்களே நம் வீடுகளில் இரவு நேரங்களில் நம் வீட்டு கதவுகளில் இந்த LED DOOR LIGHT வலது மற்றும் இடது கதவுகளில் செய்து வைத்தோம் என்றால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். சரி இனி செயல்முறைகுச் செல்வோம்.
முதலில் இதை செய்வதற்கு எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் என்னென்ன வாங்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

1. மின்தடை(Resistor) = 0.39 ஓம்(ohm)

2. மின்தடை(Resistor) = 0.39 ஓம்(ohm)

3. 4-கு LED light -கள் (உங்களுக்குப் பிடித்தமான கலர்களில் வாங்கிக் கொள்ளுங்கள்)

4. 9 volt Battery

5.ஒரு ON-OFF Switch



Circuit முதலில் படத்தில் உள்ளது போல் அமைத்துக் கொள்ள வேண்டும்.





பிறகு Switch யை ON செய்ய வேண்டும் Battery யின் 9 volt ஆனது இரண்டு  வழிகளில் 3 volt ஆக பிரிந்து சென்று மின்தடை வழியாகச் சென்று LED க்கு தேவையான அளவு மின்னழுத்தம் கிடைத்து LED ஆனது எரிய ஆரம்பிக்கிறது.

இந்த வீடியோவைப் பார்த்தால் மிகவும் நன்றாக புரியும்......





இதன் விளக்கத்தை கிழ்க்காணும் படங்களின் மூலம் மிகத் தெளிவாக காணலாம்.



இதில் ஒரு ஆஸிலாஸ்க்கோப் இனைத்து பார்த்தால் மிகத் தெளிவாகத் தெரியும்.



மேலும்  switch ON மற்றும் OFF செய்யும் போது கீழ்காணும் வகையில் காணப்படும்.  


மேலும்  இது வலதுபுரம் door க்கு மட்டும் என்று வைத்துக்கொண்டு. இதையே அப்படியே செய்து இடதுபுரத்து door கும் பயன்படுத்தலாம்.
இதை செய்து பாருங்கள் இரவு நேரங்களில் உங்களினுடைய வீடு மிகவும் பிரகாசமாக இருக்கும்.

கணக்கீடு:
                         V = I * R 
                         
                         I = V / R

                         I = 9 / 0.78
                        
                          I = 11.53 mA 

P = V * I 

P = 9 * 11.53 

P = 103.77 mWatts.

இந்த circuit - க்கு பயன்படும் அளவுகள் 

மின்னழுத்தம் V = 9 v வோல்ட் 

மின்னோட்டம் C = 11.53 mA மில்லி ஆம்ஸ் 

மின்தடை R = 0.78 ohm ஓம்ஸ் 

Power  P = 103.77 mWatts.

இந்த  மின்சுற்றுக்கு இது தான் PCB Design  ஆகும்.









பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.