கப்பாசிட்டர் நல்ல நிலையில் உள்ளதா என்பதை சரிபார்க்க பல முறைகள் இருந்தாலும் 'ஓம் மீட்டர் முறைதான்' பரவலாக உள்ளது.
ஓம் மீட்டர் முறை (Ohm meter method)
ஓம் மீட்டரில் உள்ள இரண்டு டெர்மினல்களை கப்பாசிட்டரின் இரண்டு டெர்மினளுடன் இணைக்கும் போது ஓம் மீட்டரின் அளவைக் காட்டும் முள்ளானது பூஜ்ஜியத்தின் பக்கம் நகர்ந்து பின்பு மெதுவாக அதிகபட்ச அளவிற்கு வரவேண்டும். இவ்வாறு நடந்தால் கப்பாசிட்டரானது நல்ல நிலையில் உள்ளது என்று அர்த்தம்.
திடிரென்று ஓம் மீட்டரின் முள்ளானது அதிகபட்ச அளவிற்கு செல்லாமல் நடுவே நின்று விட்டால் கப்பாசிட்டரில் மின்கசிவு உள்ளதாக அர்த்தம்.
ஓம் மீட்டரின் முள்ளானது தொடர்ந்து பூஜ்ஜியத்தைக் காட்டினால் கப்பாசிட்டர் ஷாட் (Short) ஆகிவிட்டது என்று அர்த்தம்.
ஓம் மீட்டரின் முள்ளானது சுத்தமாக நகரவே இல்லையெனில் கப்பசிட்டர் ஓப்பன் (Open) ஆகிவிட்டது என்று அர்த்தம்.
ஸ்குரு ட்ரைவர் மூலம் கப்பாசிட்டரை சோதிக்கலாம்
முதலில் கன்டன்சருக்கு டி.சி சப்ளை (பாட்டரி மூலம்) கொடுக்க வேன்டும். பிறகு கன்டன்சரானது சார்ஜ் ஆகும். அதற்குப் பிறகு ஸ்குரு ட்ரைவரை எடுத்துக் கொண்டு கப்பாசிட்டரின் இரண்டு டெர்மினல்களில் மீது வைக்கும் போது மின் தீப்பொறி ஏற்படும் அப்படி ஏற்ப்பட்டால் கப்பசிட்டரானது நல்ல நிலையில் உள்ளது என்று அர்த்தம். மின் தீப்பொறி ஏற்படாவிட்டால் காப்பாசிட்டர் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம்.