கார்,
பஸ்,
லாரி,
ஸ்கூட்டர்
முதலியவற்றில் வெட் பேட்டரிகள்
பயன்படுத்தப்படுகிறது.
இந்த பேட்டரிகளில்
ஒரு செல்லுக்கு 2 ஓல்ட்
வீதம் கிடைக்கிறது. 3
செல் பேட்டரி
6 செல்
பேட்டரி என இரண்டு வகைகளில்
கிடைக்கிறது. 3 செல்
பேட்டரியில் 6 ஓல்ட்டும்
6செல்
பேட்டரியில் 12 ஓல்ட்டும்
DC மின்சாரம்
கிடைக்கிறது.
இந்த
பேட்டரிகளில் நீர்த்த கந்தக
அமிலம் பயன்படுத்தப்படுகிறது.
இதில் இந்த
அமிலம் ஊற்றுவதற்காக தனிதனி
அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
ஸ்கூட்டரில்
உள்ள பேட்டரிகள் சிறிதாக
இருந்தாலும் அதன் ஓல்ட் அளவு
ஒன்றுதான். லாரி,
பஸ்,
போன்ற பெரிய
வாகனங்களில் 24 ஓல்ட்
மின்சாரம் தேவைப்படுவதால்
இரண்டு 12 ஓல்ட்
பேட்டரிகளை சீரிஸில் இணைத்து
மின்சாரத்தை எடுப்பார்கள்.
இந்த
பேட்டரிகளில் ஆம்பியர் மிகவும்
அதிகம். ஆகவே
இதன் இணைப்பு பகுதிகளில்
உலோக பொருள்கள் எதையும் வைக்க
கூடாது. அப்படி
வைத்தால் நெருப்பு உண்டாவதுடன்
பேட்டரியும் வீக்காகும்.