காரணங்கள்:
- மிகக் குறைந்த அளவு மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தம் இருக்கலாம்.
- அளவுக்கு அதிகமான சுமை இருப்பது. அதாவது ஓவர் லோட் இருப்பது.
- கட்டுப்படுத்தும் கியர் அமைப்பானது பழுதடைந்திருத்தல்.
- லோடிற்கு தேவையான துவக்கச் சுழற்று திறன் (ஸ்டார்ட்டிங் டார்க்) மிகவும் அதிகமாக இருத்தல்.
- மோட்டாரின் உட்பகுதியில் இருக்கும் சுழலும் பகுதியான ரோட்டாரானது பழுதடைந்து இருக்கலாம்.
- எதிர் இணைப்பு முறை. அதாவது ரிவர்ஸ் இணைப்பு ஏற்பட்டிருக்கலாம்.
- பேரிங்கிற்கு சரியான அளவில் லூப்ரிகேசன் இல்லதிருத்தல்.
- மோட்டாரின் உட்பகுதியில் இருக்கும் சுழலும் பகுதியான ரோட்டார் மற்றும் நிலையான பகுதி ஸ்டேட்டார் இவை இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளியில் (அலைன்மெண்ட் சரியில்லாத காரணத்தினால்) பேரிங்கானது பிடித்துக் கொண்டிருத்தல்.
பெருப்பாலும்
இந்தக் காரணத்தினால் தான்
மோட்டரானது மின்சப்ளை கொடுத்தும்
ஓடாததற்கு காரணம் ஆகும்.
இதை எப்படிநிவர்த்தி செய்தல் என்பதை
அடுத்த பதிவில் பார்ப்போம்.