மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

Cell phone மூலமாக TV Remote-ஐ சோதனை செய்யலாம்

TV (தொலைக்காட்ச்சி ):

இன்றைய மக்களின் மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. மேலும் 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்ச்சியை அமைக்க காரணமாக இருந்ததே இந்த தொலைக்காட்ச்சிதான். 



இந்த தொலைக்காட்ச்சியானது ஒலி,ஒளி அலைகளை சேர்த்து நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்ச்சி  ஆண்களை  விட பெண்களுக்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது. இந்த தொலைக்காட்ச்சியை Remote  இல்லாமல் நாம் இயக்குவது சற்று சிரமம் ஆகும்.

TV Remote:

இந்த TV Remote ஆனது பழுது அடைந்தால் எப்படி சரி செய்வது என்பது பல பேருக்கு தெரிவதில்லை ஆனால் அதை மிகவும் எளிதாக சரி பார்க்களாம்.
நம்முடைய வீட்டில் உள்ள TV Remote வேலை செய்யவில்லை என்றால் முதலில் பேட்டரி சாரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். பிறகு அணைத்து Remote பட்டன்களும் சரியாக உள்ளதா என்பதை பார்க்க Remote பட்டன்களை அழுத்தும் போது எந்த பட்டன் இயங்கவில்லையோ அந்த பட்டனை மட்டும் மாற்றினால் போதும்.

இப்படி பேட்டரி மற்றும் Remote பட்டன்கள் சரியாக இருந்தும் Remote வேலை செய்யவில்லை என்றால் அந்த Remote-ற்கு முன்புறம் ஒரு Infrared LED  இருக்கும் இந்த  Infrared LED ட்ரான்ஸ்மிட்டராக செயல்படும் அதாவது அதிர்வெண் அலைகளை (Frequincy waves) சரியாக அணுப்பும். TV- யில் இதே போன்ற  LED அமைப்பு இருக்கும் இது ரிஸிவாராக செயல்படும். இது அந்த அதிர்வெண் அலைகளை ஈர்க்கும் பிறகு TV channel மாற்றமடையும்.

இப்படி TV Remote-ல் உள்ள Infrared LED ஆனது சரியாக உள்ளதா என சோதிக்க. நாம் வைத்துள்ள cell phone-ல் கேமரா வசதி இருக்க வேண்டும். செல்பேசியில் உள்ள கேமராவை ON  செய்து கொண்டு அதற்கு  முன்னால் நம்முடைய  TV Remote-ன் Infrared LED அமைப்பை காட்ட வேண்டும். அப்படி காட்டும் போது  Remote பட்டன்களை அழுத்த வேண்டும். பிறகு நம்முடைய செல்பேசியில் உள்ள கேமராவில் Infrared LEDஆனது எரிவதை நாம் காணலாம் அப்படி எரியவில்லை என்றால். TV Remote பழுதடைந்து விட்டது என்று அர்த்தம்.

குறிப்பு:

சாதாரன LED-ஐ போல் இந்த  Infrared LED  எரியாது.
இந்த  Infrared LED ஆனது Transmit மற்றும் Receiving வேலையைச் செய்கிறது.

இந்த முறையில் நாம் TV Remote-ஐ நம்முடைய செல்பேசியில் உள்ள கேமராவை பயன்படுத்தி பழுதடைந்துள்ளதா என்பதை காணலாம்.


பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.