நாம்
பேசும் போது மைக்கில் இருந்து
கிடைப்பது ஒலிமின் அலைகள்.
நிகழ்ச்சிகளை
படம் பிடிக்கும் போது வீடியோ
கேமராவில் இருந்து கிடைப்பது
ஒளி மின் அலைகள் ஆகும்.
டி.வி.யில்
இந்த ஒலிமின் அலையும்,
ஒளிமின்
அலையும் சேர்த்து சொல்ல
வேண்டுமானால் வீடியோ அலை
என்று சோல்ல வேண்டும்.
ஒலிமின்
அலையை மட்டும் தனியாக சோல்ல
வேண்டுமானால் ஆடியோ அலை என்று
சொல்ல வேண்டும்.
ரேடியோ
அலை:
ரேடியோ
அலைகளை, வான்
அலைகள் என்றும், கேரியர்
வேவ்ஸ் என்றும் சொல்லலாம்.
இந்த அலை
வானவெளியில் பரவிச் செல்வதால்
வான் அலை என்றும், ஒலி,
ஒளி மின்
அலைகளை சுமந்து செல்வதால்
கேரியர் வேவ்ஸ் என்றும்
சொல்லலாம்.
இந்த
ஒலி மின், ஒளி
மின் முதலிய அலைகள் தானாக
காற்றில் கலந்து செல்லாது.
காற்றில்
பரவக்கூடிய சக்தி இந்த
அலைகளுக்கு இல்லை. ஆகவே
ஒலி மின், ஒளி
மின் அலைகளை ரேடியோ அலையில்
( Radio frequency) கலந்து
அனுப்புகின்றனர். ரேடியோஅலைகள் மற்ற அலைகளை சுமந்து
காற்றில் பரவிச் செல்லும்.
ஒயர்லஸ்,
செல்போன்
போன்ற சாதனங்களிலும் ரேடியோ
அலைகள் பயன்படுத்தப்படுகிறது.
எலக்ட்ரானிக்ஸ்
சாதனங்களில் முதன் முதலில்
கண்டுபிடிக்கப்பட்டது ரேடியோ
ஆகும். அந்த
காலகட்டத்தில் ரேடியோவிற்கு
மட்டும் ரேடியோ அலைகள்
பயன்பட்டதால் இது ரேடியோ
அலை என்று சொல்லப்பட்டது.