Induction motor-ன் முக்கிய பாகங்கள்.
- Stator.
- Rotor.
இந்த மோட்டாரின் அமைப்பை பொருத்து தான் Induction மோட்டாரை இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
- Squirel Cage Induction Motor.
- Slipring Induction Motor.
Stator:
Squirel cage மற்றும் Slipring இந்த இரண்டு வகையான மோட்டார்களுக்கு Stator அமைப்பு ஒன்று தான் ஆனால் இதன் Rotor அமைப்பானது மாறுபடுகிறது.
- Squirel cage stator
- Slipring stator
Stator அமைப்பானது சிலிக்கான் எஃக்கினால் எசெய்யப்பட்ட மெல்லிய தகடுகளால் lamination ஏற்படுத்தப்பட்டு செய்யப்படும் மேலும் இது ஒரு குழாய் வடிவம் கொண்டது. இதன் உட்புறத்தில் வைண்டிங் செய்வதற்காக slot அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கும். வேகத்திற்கு ஏற்றவாறு இதன் pole களின் எண்ணிக்கை இருக்கும். இது 3 ஃபேஸ் என்பதால் இந்த மோட்டாரில் மூன்று வைண்டிங் சுற்றப்பட்டு இருக்கும். இந்த வணைடிங்கின் முனைகள் வெளியில் டெர்மினல் போர்டில் பொருத்தப்பட்டிருக்கும். இதில் star அல்லது delta இணைப்பில் 3ஃபேஸ் சப்ளை கொடுக்கப்படுகிறது.
Rotor:
Squirel cage motor:
Slipring Rotor:
இந்த Rotor ஆனது Wound Rotor என்றும் அழைக்கப்படுகிறது. இந்த Rotor-ன் ஒரு பக்கம் மட்டும் மூன்று வளையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இந்த வளையங்களில் Rotor-ன் slot-ல் சுற்றப்பட்டுள்ள வைண்டிங்குகளின் முனைகள் star இணைப்பில் இணைக்கப்பட்டிருக்கும். மேலும் இணைப்பில் இருந்து கிடைக்கும் மூன்று முணைகளும் Shaft-ல் insulation செய்யப்பட்டு பொருத்தப்பட்டிருக்கும்.
குறிப்பு:
இதில் வளையங்கள் என்பது Slipring ஆகும்.