மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

3ஃபேஸ் இன்டஷன் மோட்டார் (3-Phase induction motor)

Induction motor-ன் முக்கிய பாகங்கள்.
  • Stator.

  • Rotor.

இந்த மோட்டாரின் அமைப்பை பொருத்து தான்  Induction மோட்டாரை இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
  • Squirel Cage Induction Motor.
  • Slipring Induction Motor.
Stator:

Squirel cage மற்றும் Slipring இந்த இரண்டு வகையான மோட்டார்களுக்கு  Stator அமைப்பு ஒன்று தான் ஆனால் இதன் Rotor அமைப்பானது மாறுபடுகிறது. 
  • Squirel cage stator
  • Slipring stator 

Stator அமைப்பானது சிலிக்கான் எஃக்கினால் எசெய்யப்பட்ட மெல்லிய தகடுகளால் lamination ஏற்படுத்தப்பட்டு செய்யப்படும் மேலும் இது ஒரு குழாய் வடிவம் கொண்டது. இதன் உட்புறத்தில் வைண்டிங் செய்வதற்காக  slot அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கும். வேகத்திற்கு ஏற்றவாறு இதன் pole களின் எண்ணிக்கை இருக்கும். இது 3 ஃபேஸ் என்பதால் இந்த மோட்டாரில் மூன்று வைண்டிங் சுற்றப்பட்டு இருக்கும். இந்த வணைடிங்கின் முனைகள் வெளியில் டெர்மினல் போர்டில் பொருத்தப்பட்டிருக்கும். இதில் star அல்லது delta இணைப்பில் 3ஃபேஸ் சப்ளை கொடுக்கப்படுகிறது.

Rotor:

Squirel cage motor:

இது உருளை வடிவமானது மேலும் இது சிலிக்கான் இரும்புத் தகடுகளால் செய்யப்பட்டிருக்கும். stator-ல் இருக்கக்கூடிய slot களுக்கு தக்கவாறு  Rotor-ல் slot-கள் ஏற்படுத்தப்பட்டு வைண்டிங் செய்யப்படும். இந்த Rotor-ன் இரு பக்கங்களிலும் வளையங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் வைண்டிங்கின் முணைகளானது இணைக்கப்பட்டிருக்கும். 

Slipring Rotor:
இந்த Rotor ஆனது Wound Rotor என்றும் அழைக்கப்படுகிறது. இந்த Rotor-ன் ஒரு பக்கம் மட்டும் மூன்று வளையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இந்த வளையங்களில்  Rotor-ன் slot-ல் சுற்றப்பட்டுள்ள வைண்டிங்குகளின் முனைகள்  star இணைப்பில் இணைக்கப்பட்டிருக்கும். மேலும் இணைப்பில் இருந்து கிடைக்கும் மூன்று முணைகளும் Shaft-ல் insulation செய்யப்பட்டு பொருத்தப்பட்டிருக்கும்.

குறிப்பு:

இதில் வளையங்கள் என்பது Slipring ஆகும்.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.