மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

Microprocessor மற்றும் Micro controller பற்றிய தெளிவான விளக்கம்.

Microprocessor:

Microprocessor என்பது large scale integration-னில் (LSI) உருவாக்கப்பட்ட ஒரு IC ஆகும். இது arithmetic, logic மற்றும் control circuit-களை பெற்றிருக்கிறது. மேலும் இதனுள் பல internal resistor-களும் உள்ளன. இந்த IC ஆனது micro computer system-த்தில் மிக முக்கியமான பகுதி (Central Processing Unit) ஆகப் பயன்படுகிறது.

இந்த Microprocessor IC-யுடன் மெமரி, இன்புட், மற்றும் அவுட்புட் டிவைஸ்கள் சேர்ந்த அமைப்பு micro processor based system (or) micro computer என்று அழைக்கப்படுகிறது.
இந்த IC ஆனது மெமரியில் இருந்து தகவல்களைப் (Instruction) பெற்று, decode மற்றும் execute செய்கிறது.
இன்புட் டிவைஸில் இருந்து data-களை பெற்று arithmetic மற்றும் logic operation-களை Instruction படி செய்து result ஜ அவுட்புட் டெவைஸிற்கு அனுப்புகிறாது.


நாம் ஒரு எளிய productஜ உருவாக்க நினைக்கும் போது microprocessor உடன் RAM, ROM மற்றும் input/output port IC-களை வெளியில் இணைக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த கஷ்டத்தை நிவத்தி செய்வதற்காக குறைந்த அளவில் RAM, ROM, Timer மற்றும் input/output port ஆக்கியவைகளை உள்ளடக்கிய ஒரு internal microprocessor IC-யே micro controller எனப்படுகிறது.

Micro controller IC-யினுல் உள்ள ROM-ல் program-ஜயும் RAM-ல் data-வையும் வைத்து செயல்படச் செய்யும்போது micro controller ஆனது ஒரு micro computer ஆக பயன்படுகிறது.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.