மின் ஊட்டம் இடம் பெயர்வதையே மின்னோட்டம் என்று சொல்லுகிறோம். ஓரழகு நேரத்தில் ஒரு புள்ளியை கடந்து செல்லும் மின் ஊட்டத்தின் அளவையே மின் ஓட்டத்தின் வலிமை ஆகும். கடத்தியில் நிகழும் மின் ஓட்டம், அதன் முனைகளுக்கிடையே ஏற்படும் மின் அழுத்த பேதத்தையும் பொறுத்தது.
இம் மின்னோட்டத்தி அளக்கப் பயன்படும் அலகு ஆம்பியர் ஆகும். மின்னோட்டங்களுக்கு இடையேயுள்ள காந்த விசைகளுக்கான விதிகளை முதன் முதலில் கண்டறிந்த விஞ்ஞானியான ஆம்பியரின் நினைவாகவே, மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆம்பியர்:
ஒரு வோல்ட் மின் அழுத்தமுள்ள கடத்தியின் இரு முனைகளுக்கு இடையில் ஒரு ஓம் மின்தடை இருக்குமானால் அதில் பாயும் மின்னோட்டத்தின் அளவு ஒரு ஆம்பியர் ஆகும். ஆம்பியரை அடையாளமிட 'A ' என்னும் எழுத்தை உபயோகிக்கிறோம்.