மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

1] எவர் வேண்டுமானாலும் கணக்கிடலாம்


  • வீட்டு மின்சார அளவுகள் இதைப்பற்றி முன்பே நான் குறிப்பிட்டுள்ளேன்.
  • இதில்  நான் அதை விட மிக எளிமையான முறையில் எழுதியுள்ளேன்.
சரி பாடத்திற்குப் போவோம் :
  • நாம் அனைவருமே வீட்டு கரண்டு பிள்ளை இரண்டுமாதத்திற்கு ஒருமுறை கட்டுகிறோம்.
  • ஆனால் நம்மில் பலபேருக்கு வீட்டில் நாம் எவ்வளவு கரண்டு பயன்படுத்துகின்றோம் என்று தெரியாது.
  • இரண்டு யூனிட் முற்று யூனிட் என்று வாய்வழியாக பேசிக்கொள்வோம் ஆனால் யூட் என்றால் என்னவென்று  தெரியாது.
கவனமாக பாருங்கள்:
  • முதலில் வீட்டில் நாம்  பயன்படுத்தும் light மற்றும் fan -ன் வாட்ஸ் எவ்வளவு என்று பார்க்க வேண்டும்.
  • light -ன்  வாட்ஸ் பார்ப்பதற்கு அந்த light -ன் முகப்பிலே 60watts அல்லது 40watts ஏற்று இருக்கும் .
  • நான்கு 60watts பல்பு மற்று நான்கு 80watts பேன்கள் உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தினால் எவ்வளவு கரண்டு வரும் என்பதைப்பார்ப்போம்
நான்கு பல்பு 60watts 
நான்கு பேன் 80watts
  • ஒரு பல்பு 60watts என்றால் நான்கு பல்பு =240watts ஆகும்.
  • ஒரு பேன் 80watts  என்றால் நான்கு பேன் =320watts ஆகும். 
  • 240+320=560 வாட்ஸ் .
  • 560watts * 4 மணிநேரம் = 2240watts ஆகும் .
  • இந்த வாட்சை -1000 த்தால் வகுக்கவேண்டும் . ஏனென்றால் ஒரு யூனிட் என்பது 1000waats ஆகும்.
  • அப்படிவகுத்தால் நமக்கு 2 .24 யூனிட் கிடைக்கும் அப்படி என்றால் நாம் ஒருநாளைக்கு 2 .24 யூனிட் பயன்படுத்துகிறோம் ஏற்று அர்த்தம்.
  • ஒருமாதத்திற்கு 30*2.24=67.2 யூனிட் ஆகும்.
  • 67 .2 யூனிட் ஒருமாதத்திற்கு பயன்படுத்துகிறோம் என்று அர்த்தம்.
  • ஒரு யூனிட் 1.80 பைசா என்றால் 67.2 யூனிட்டுக்கு 120.96 ரூபாய் ஆகும்.[67.2 * 1.80=120.96 RS]
என்ன நண்பர்களே  இதைப்பார்த்து புரிந்துகொண்டு உங்களால் முடிந்தவரை மின்சாரத்தை சேமியுங்கள் .

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.