ஆதார விவரங்கள் [Basic concepts ]
மின்சாரம் என்பது ஒரு வகையான சக்தி.மின்சாரத்தை கண்ணால் காண இயலாது.ஆனால் அதனுடைய பல்வேறு செயல்களில் இருந்து உணர முடியும்.பொதுவாக சக்தியை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.ஒரு சக்தியை மற்றொரு சக்தியாக மாற்ற முடியும். இதன் அடிப்படையில் மின்சக்தியானது,நமக்கு இயந்திர சக்தி, வெப்ப சக்தி, மற்றும் இராசாயன சக்தி,அணு சக்திகளில் இருந்து கிடைக்கிறது. இதே போல் மின்சக்தியையும் நாம் இயந்திர சக்தியா ,ஒலி சக்திய,ஒளி சக்தியாக,வெப்ப சக்தியாக,இராசாயன சக்தியாக மாற்றலாம்.
ஏறத்தாள கி.மு. 600 -க்கு முன்னமேயே, கிரேக்கர்கள் ஆம்பர் என்னும் ஒரு வகை பழுப்பு நிற இருக்கியா கோந்தை, ஒரு சிறிய பட்டுத் துண்டிலோ, அல்லது கம்பளி துண்டிலோ தேய்த்தால் அது காகிதம்,வைக்கோல்,துரும்பு போன்ற இலேசான பொருள்களை ஈர்ப்பதை கண்டறிந்தனர்.
பின்னர் கி.மு.1600 இல் கில்பர்ட் என்னும் பிரிட்ஸ் விஞ்ஞானி இது போன்ற ஈர்க்கும் தன்மைக்கு மின் இயல் [ELECTRICITY ] என்று பெயரிட்டார். ஆம்பரை கிரேக்க மொழியில் ஏலேக்ட்ரோன் என்று அழைப்பார்கள். இதை ஒட்டியே ஆங்கிலத்தில் மின் இயலுக்கு electricity என்று பெயர் வந்தது. பின்னர் படிப்படியாக முன்னேற்றம் கண்டு, இன்று மின் இயல் இவ்வுலகத்தில் மிக உன்னத நிலையை அடைந்திருக்கிறது.
மின் இயலை இரு கூராக பிரிக்கலாம்:
௧. நிலை மின்னியல் [static electricity]
௨. இயங்கு மின்னியல் [dynamic electricity ]